ஐ.எஸ்.ஆர் 5 நிமிட குறும்படப்போட்டி - ISR 5 minute short film contest

 ஐ.எஸ்.ஆர் 5 நிமிட குறும்படப்போட்டி - ISR 5 minute short film contest



இளம் படைப்பாளர்களுக்கு புதிய வாய்ப்பு! குறும்படம் எடுத்து உங்கள் திறமையை நிரூபிக்கலாம்.


திரைப்படங்கள் தயாரிக்கும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ்  நிறுவனம் 5 நிமிட குறும்படப் போட்டியை அறிவித்துள்ளது.


குறும்படம் எடுப்பவர்கள் எப்போதுமே காதல் படம், திரில்லர் அல்லது பேய்படம்தான் எடுக்கிறார்கள் என ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் அது உண்மையில்லை. நம் இளைஞர்கள் மிகத் திறமையானவர்கள். அவர்களால் எந்த வகையிலான படத்தையும் எடுக்க முடியும் என்பதை நிரூபிக்கவே இந்தப் போட்டி.


எனவே அவர்களின் சிந்தனையை ஒருமுகப்படுத்தும் வகையில் குறும்படப் போட்டியின் மையக் கருவாக ”குழந்தைகளின் உரிமைகள் - Child Rights" என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.


போட்டியாளர்கள் நூற்றுக்கணக்கில் பங்கேற்கும்போது, அந்தக் குறும்படங்கள் வழியாக குழந்தைகளின் உரிமைகள் என்றால் என்ன? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி பல்வேறு கோணங்களில் கருத்துகள் வெளியாகும்.


குறிப்பாக இளைஞர்களிடமிருந்து அது வெளிப்படும்போது மிக வேகமாக அது அனைவரையும் சென்றடையும். மிக மிக முக்கியமாக நமது இளைஞர்கள் நல்ல சிந்தனைகள் உள்ள படம் எடுக்கும் திறமையுள்ளவர்கள் என்பது நிரூபணமாகும்.


எனவே இளைஞர்களை வாழ்த்தி வரவேற்கிறோம். ஐ.எஸ்.ஆர் 5 நிமிட குறும்படப்போட்டியில் கலந்து கொள்ளுங்கள். கமர்ஷியல் படங்களும் எடுப்போம், கருத்துள்ள படங்களும் தருவோம் என்பதை நிரூபியுங்கள்.


போட்டி என்றிலிருந்து துவங்கும், அதில் எப்படி கலந்து கொள்ளலாம், பரிசுத் தொகை என்ன என்பது பற்றிய விபரங்கள் வெகு விரைவில் வெளியாகும்.


ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனத்திற்கு  9962295636 என்ற வாட்ஸ்அப் எண்ணில் மெசேஜ் அனுப்பி, உங்கள் ஆர்வத்தை தெரிவிக்கலாம். 


இளம் குறும்பட இயக்குநர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,