ஆகஸ்ட், 6ஆம் நாள் பெரும் சோகம் -ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியி

 


வரலாற்றில் இன்று 2002, ஆகஸ்ட், 6ஆம் நாள் பெரும் சோகம் -ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் ஏராளமான மன நலக் காப்பகங்கள் இருந்தன. இங்கு மன நலம்பாதிக்கப்பட்ட நோயாளிகள் கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 2002-ம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் நாள் ஒரு காப்பகத்தில், பெரும் தீவிபத்து ஏற்பட்டது. தீ குபுகுபுவென காப்பகம் முழுவதும் பரவியது. சிறிய இல்லமாக அந்தக் காப்பகம் இருந்ததால் உள்ளேயிருந்த மன நோயாளிகள் தப்பி . வர முடியவில்லை. அவர்களில் பெரும்பாலானோர் சங்கிலிகளால் கட்டி வைக்கப்பட்டிருந்ததால் தப்பிப்பதற்கு வாய்ப்பே இல்லாமற் போனது 20-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் கருகி இறந்தனர். தீ விபத்து குறித்து அறிந்த தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்தனர். நீண்ட நேரப்போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. உள்ளே சிக்கி இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. சில பிணங்கள் அடையாளமே காண முடியாத அளவுக்கு கருகின. பலர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தினைத் தொடர்ந்து ஏர்வாடியில் செயல்பட்டுவந்த மனநலக் காப்பகங்கள் அனைத்தும் மூடப்பட்டன அந்த காப்பகங்களில் இருந்த மன நோயாளிகள் அனைவரும் தமிழக அரசின் பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டனர்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,