கவிஞர் இரவீந்தரநாத் தாகூர் நினைவு நாள்
இன்று புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் இரவீந்தரநாத் தாகூர் நினைவு நாள் ஆகஸ்ட் 7, 1941. இவர் இயற்றிய. கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசுபெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே. மக்கள் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைப்பதுண்டு. இவருடைய மற்றொரு பாடல் "அமர் சோனார் பங்களா" வங்காளதேசத்தின் தேசிய கீதமாக உள்ளது. இதுபோல இரண்டு நாடுகளின் தேசிய கீதங்களை இயற்றிய கவிஞர் என்னும் பெருமையைப் பெற்றவர் தாகூர் மட்டுமே
Comments