தேசிய கைத்தறி தினம்

 


இந்திய  நாடு முழுவதும் இன்று ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நெசவாளர்களை கவுரவிக்கும் விதமாக இந்த தினம் கடந்த ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது அந்நியத் துணிகளை புறக்கணிக்கும் விதமாக 'சுதேசி இயக்கம்' 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதன் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் சிறப்பு கைத்தறி கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், இத்தினத்தில் நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அனுபவம் மிக்கவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி