இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சி தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் நினைவு நாள்

.




இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சி தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் நினைவு நாள் ஆகஸ்ட் 1. 

பஞ்சாப் மாநிலத்தில் 1916-ம் ஆண்டு விடுதலைப் போராட்ட பாரம்பரிய மிக்க குடும்பத்தில் பிறந்த அவர், இளம்வயதிலேயே நாட்டின் விடுதலைப் போரா‌ட்ட‌த்‌தி‌ல் போராடத் துவங்கினார்.காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றிய அவர், பஞ்சாப் மாநில விவசாயிகள் சங்கத் தலைவராகவும் பணியாற்றினார் .பதினான்கு வயதில் போலீசாரின் துப்பாக்கிக் குண்டை எதிர்கொண்டு ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் மூவர்ணக் கொடி ஏற்றிய தீரர்.பகத்சிங் அமைத்த நவஜவான் பாரத் சபா அமைப்பில் பணியாற்றியவர்

இந்தியப் கம்யூனிஸ்ட் கட்சியி‌ல் 1936 இ‌ல் இணை‌ந்தா‌ர்.ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3-வது அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற்றபோது, கட்சியின் அரசியல் தலைமைக்குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டார்.பி‌ன்ன‌ர் 28 ஆ‌ண்டுக‌ளு‌க்கு ‌பிறகு இ‌ந்‌திய‌க் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி இர‌ண்டாகப் பிளவடைந்த போது, மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சியில் சேர்ந்தார்.13 ஆ‌ண்டுக‌‌ள் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயலராக‌ப் ப‌ணியா‌ற்‌றிய சு‌ர்‌ஜீ‌த், ‌தீ‌விர அர‌‌சிய‌லி‌ல் இரு‌ந்து ஓ‌ய்வு பெ‌ற்றா‌ர்.1978 முத‌ல் 1984 வரை மா‌நில‌ங்களவை உறு‌ப்‌பின‌ர் பத‌வி வ‌கி‌த்த சு‌ர்ஜீ‌த், இர‌ண்டு முறை பஞ்சாப் ச‌ட்ட‌ப் பேரவை உறு‌ப்‌பினராகவு‌ம் இரு‌ந்து‌ள்ளா‌ர் (1953- 57 ம‌ற்று‌ம் 1967- 69).கா‌ஷ்‌மீ‌ர் ‌பிர‌ச்சனை உ‌ள்‌ளி‌ட்ட‌ப் ப‌‌ல்வேறு ‌விவகார‌ங்க‌ள் தொட‌ர்பாக நூ‌ற்று‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட பு‌த்தக‌ங்களையு‌ம் அவ‌ர் எழு‌தியு‌ள்ளா‌ர்.

சுதந்திரப் போராட்ட வீரர் , விவசாயிகளை அணிதிரட்டுவதில் மகத்தான பங்கு ,இந்தியாவில் கூட்டணி அரசியல் சகாப்தத்தை உருவாக்கிய சிற்பி , மதச்சார்பின்மை உயர்த்திப் பிடித்தவர் , பொதுவுடமைவாதி , எழுத்தாளர் என்று பன்முகம் கொண்டது இவரது பொது வாழ்வு

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி