ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அணுகுண்டு வீசப்பட்டதன் 77ஆவது ஆண்டு நினைவு நாள்

 


வரலாற்றில் இன்று -  ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அணுகுண்டு வீசப்பட்டதன் 77ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று 

இரண்டாம்   உலகப் போரின்  இறுதியில் தனது புதிய கண்டுபிடிப்பான அணுகுண்டுகளை பரிசோதிக்கும் தளமாக ஜப்பானை அமெரிக்கா பயன்படுத்த தீர்மானித்தது.. இரண்டாம் உலகப் போரின் இறுதி நாட்களில் தான் சரணடைவதாக ஜப்பான் அறிவித்த போதிலும் அந்த தகவல் தனக்கு கிடைக்கவில்லை என்று பொய் கூறி அமெரிக்க நாடு தான் கண்டுபிடித்த புதிய ஆயுதத்தை   சோதித்து பார்க்க வேண்டி இந்த கொடுமையை செய்தது

சின்னப் பையன் (Little Boy) என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு ஹிரோஷிமா நகர்மீது 1945, ஆகஸ்டு 6-ம் திகதியும், குண்டு மனிதன் (Fat Man) என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு நாகசாகி நகர் மீது மூன்று நாட்களுக்குப் பின்னர் அதாவது ஆகஸ்டு 9-ம் திகதியும் வீசப்பட்டன.

இதனால் நினைத்துப்பார்க்கவும் முடியாத பேரழிவுகளை ஜப்பான் சந்திக்க நேர்ந்தது. அந்த அழிவின் சாட்சியங்கள் இன்றும் அந்த நாட்டில் நிலைத்துள்ளன. ஹிரோஷிமாவில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும், நாகசாயில் 80 ஆயிரம் பேரும் மடிந்தனர். குண்டு விழுந்த பிறகு மாதக் கணக்காக, வருடக்கணக்காக சிலர் குற்றுயிரும் குலையுயிருமாக உயிருடன் இருந்து துன்பப்பட்டு, கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தனர்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,