பால கங்காதர திலகர் நினைவு நாள்

 


" சுதந்திரம் எனது பிறப்புரிமை" என்று முழங்கிய

பால கங்காதர திலகர் நினைவு நாள்  இன்று. இளங்கலைப் பட்டம் பெற்ற திலகர், அதன்பின் சட்டம் பயின்றார். தேச பக்தர்களுக்காக வாதாடி அவர்களை சிறையிலிருந்து மீட்டார். 1881 ஆம் ஆண்டு நண்பர்களுடன் சேர்ந்து கேசரி என்ற மராட்டிய மொழி மற்றும் மராட்டா என்னும் ஆங்கில மொழி பத்திரிகையையும் தொடங்கினார். ஆங்கில அடக்குமுறை மற்றும் சுரண்டல்களைப் பற்றி பத்திரிகையில் தொடர்ந்து எழுதினார். இதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் 1885ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1896ஆம் ஆண்டு பஞ்சாபில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டே “பிளேக்” நோய் பரவியது. அதனை தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த இரக்கமற்ற ஆங்கில அரசு, விக்டோரியா மகாராணியின் வைர விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தது. இதனை திலகர் கண்டித்து பத்திரிகையில் எழுதினார். இதற்காக கைது செய்யப்பட்டார். விடுதலைக்குப் பின் மீண்டும் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரம் காட்டிய திலகர் அரசியலில் தீவிரமாக செயல்பட்டார். 1907ஆம் ஆண்டு நாக்பூரில் காங்கிரஸ் மாநாடு நடைப்பெற்றது. அப்போது கட்சி மிதவாதிகள், தீவிரவாதிகள் என இரு பிரிவுகளாக பிரிந்தது.

திலகரின் தலைமையில் உருவான குழு அந்நிய ஆட்சியை எதிர்த்து தீவிரமாக செயல்பட்டது. திலகரின் செயல்பாடுகளால் 1906ஆம் ஆண்டு அவரை மீண்டும் கைது செய்யப்பட்டார். ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். தன்னுடைய இறுதி காலம் வரை பாரத சுதந்திரத்துக்காக போராடிய திலகர் ஆகஸ்ட் 1, 1920ஆம் ஆண்டு தன்னுடைய 64 வயதில் காலமானார்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,