குதிராம் போஸ் நினைவு நாள்
இன்று வங்காளப் புரட்சியாளர்.- இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்ட குதிராம் போஸ் நினைவு நாள் (ஆகஸ்ட் 11 ,1908). ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, அந்த குற்றத்துக்காக தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர் 1905-வங்கப் பிரிவினைக்கு எதிராக நாடே கொந்தளித்தது தேசப்பற்று மிக்க குதிராமும் இயல்பாகவே அந்தப் போராட்டத்தில் குதித்தார்; பல காவல் நிலையங்களை குதிராமின் குழு குண்டுகளால் தாக்கியது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களில் பிரிட்டிஷ் அதிகாரிகள் மீது தாக்குதல்கள் நடந்தது. யார் தாக்குகிறார்கள் என்று தெரியாமல் ஆங்கிலேய அரசு மிரண்டது.
குண்டுவீசி தப்பியவர்களைப் பிடிக்க அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டது. புரட்சியாளர்கள் குறித்த தகவல் தெரிவிப்போருக்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டது. முதல் தேதி குதிராம் சிக்கினார். விடுதலை வீரர்களுக்கு கொடும் தண்டனை வழங்கி வந்ததால்தான் மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்டைக் கொல்ல குண்டு வீசியதாகவும், அதில் அவர் தப்பியதும் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இறந்ததும் வருத்தம் அளிப்பதாகவும் குதிராம் கூறினார். அதன் பிறகு நடந்த தேசத்துரோக வழக்கில் குதிராமுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
அதன்படி, 1908-ஆம் ஆண்டி ஆகஸ்ட் 11 ம் தேதி குதிராம் போசுக்கு, முசாபர்பூர் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது அவருக்கு 18 வயது. வாய் "வந்தே மாதரம் என முழங்க அவர் உயிர் பிரிந்தது[
Comments