நீல் ஆம்ஸ்ட்ராங்

 


2007

🎯அந்த நாளில் இன்று...💥
நீல் ஆம்ஸ்ட்ராங்
🌔 நிலாவில் முதன் முதலில் கால் தடம்பதித் tத விண்வெளி வீரர் நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அமெரிக்காவின் ஒஹியோ மாநிலம் வாபகெனெட்டா நகரில் பிறந்தார்.
🌔 இவர் 6 வயதில் தந்தையுடன் விமானத்தில் பயணிக்கும் போதே விமானம் ஓட்டும் ஆசை வந்துவிட்டது. தனது 16 வயதிலேயே விமான ஓட்டுநர் உரிமம் பெற்றார்.
🌔 1962-ல் நாசா விண்வெளி திட்டத்தில் இணைந்தார். அங்கு டெஸ்ட் பைலட், கமாண்ட் பைலட், பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டார்.
🌔 1969-ல் மைக்கேல் காலின்ஸ், எட்வர்ட் ஆல்ட்ரின் ஆகியோருடன் நிலாவில் இறங்கும் திட்டத்தில் சேர்க்கப்பட்டார். அப்போலோ-11 விண்கலத்தின் குழுத் தலைவராக விண்வெளிக்குச் சென்றார். 1969 ஜூலை 20-ம் தேதி நிலாவில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்தார்.
🌔 உலகம் முழுவதும் 17 நாடுகள் இவருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தன. ஏராளமான பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டம், பிரசிடென்ட் மெடல் ஆஃப் ஃப்ரீடம், அமெரிக்க நாடாளுமன்ற தங்கப் பதக்கம், ஸ்பேஸ் கவுரவப் பதக்கம், சிறந்த பணிக்கான நாசா விருது போன்ற பல பரிசுகள், விருதுகளை பெற்றுள்ளார்.
🌔 இவரது வாழ்க்கை வரலாற்று நு}லான 'ஃபர்ஸ்ட் மேன்: த லைஃப் ஆஃப் நீல் ஏ.ஆம்ஸ்ட்ராங்" 2005-ல் வெளிவந்தது. வானியல் ஆராய்ச்சிகளில் வாழ்நாள் இறுதிவரை ஆர்வம் கொண்டிருந்த இவர் தனது 82-வது வயதில் (2012) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
🏁 விடுதலைப் போராட்ட வீரரும், பிரபல எழுத்தாளருமான துவாரகா பிரசாத் மிஸ்ரா 1901ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தின் பண்டரி கிராமத்தில் பிறந்தார்.
🎻 வயலின் இசைக்கலைஞர் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை 1898ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி தஞ்சாவு+ர் மாவட்டம் ஆலங்குடியில் பிறந்தார்.
👰 ஹhலிவுட் உலகின் முடிசூடா ராணியாகத் திகழ்ந்த மர்லின் மன்றோ 1962ஆம் ஆண்டு ஆகஸ்டு 5ஆம் தேதி மறைந்தார்.
👉 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ஹோண்டா நிறுவனர் சொயிச்சீரோ ஹோண்டா மறைந்தார்.
👪 1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி 17 மாதத் தேடுதலின் பின்னர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார்.
🚀 1969ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி மரைனர் 7, செவ்வாய் கோளிற்கு மிக அருகில் சென்றது.
🗽 1884ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி விடுதலைச் சிலைக்கான அடிக்கல் நியு+யார்க் துறைமுகத்தில் பெட்லோ தீவில் நாட்டப்பட்டது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி