நடிகை ஸ்ரீதேவி.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் மட்டுமல்லாது ஹிந்தியிலும் சாதித்தவர் நடிகை ஸ்ரீதேவி. கடந்த 2018ம் ஆண்டு துபாய் சென்றபோது ஓட்டல் ஒன்றில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் ஹிந்தி மட்டுமின்றி தமிழிலும் தொடர்ந்து படங்கள் தயாரித்து வருகிறார். அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்தி படங்களில் நடிச்சு வாறார். இளைய மகள் குஷியும் நடிக்க தயாராகி வாறார்.
இந்த நிலையில் இன்று ஸ்ரீதேவியின் 59வது பிறந்தநாள் ஆகும். அதையொட்டி ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
அம்மா. ஒவ்வொரு நாளும் உங்களை நாங்கள் மிஸ் பண்ணிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லி சிறுவயதில் ஸ்ரீதேவியுடன் தான் இடம் பெற்றுள்ள புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அதையடுத்து ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரும் ஸ்ரீதேவியுடன் எடுத்துக்கொண்ட ஒரு பிளாக் அண்ட் வொயிட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
From The Desk of கட்டிங் கண்ணையா!
Comments