கமலா நேரு பிறந்த நாள்

 கமலா நேரு பிறந்த நாள் 



இன்று கமலா நேரு (ஆகஸ்ட் 1, 1899 - பிப்ரவரி 28, 1936), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவின் மனைவியும், இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் தாயாரும் ஆவார். கமலா நேரு ஆகஸ்ட் 1, 1899 அன்று பிறந்தார். இவரது பெற்றோர் ராஜ்பதி-ஜவஹர்மால் கௌர் ஆவர். இவர் தன் பெற்றோருக்கு மூத்த பிள்ளை ஆவார்.

இவரது சகோதரர்கள் சாந்த் பகதூர் கௌர் மற்றும் பயிரியலாளர் ஆன கைலாஸ்நாத் கௌர். இவரது சகோதரி ஸ்வரூப் கத்ஜு. இவர் தனது வீட்டிலிருந்து பண்டிட் மற்றும் மௌல்வியின் வழிக் காட்டுதலின் மூலம் கல்வி பெற்றார்.

இவருடைய பதினேழாம் வயதில் பண்டிட் ஜவஹர்லால் நேருவை மணந்தார். 1917 ஆம் ஆண்டில் இவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. அக் குழந்தைக்கு இந்திரா பிரியதர்ஷினி எனப் பெயர் சூட்டப்பட்டது. நண்பர்கள்:

கமலா நேரு சிறிது காலம் சபர்மதி ஆசிரமத்தில் தங்கியிருந்த போது அவருக்கு கஸ்தூரிபாய் காந்தியுடனும் பிரபாவதி தேவியுடனும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது.

பிப்ரவரி 28, 1936 அன்று கமலா நேரு காச நோய் பாதிப்பால் சுவிட்சர்லாந்திலுள்ள லாசன்னில் காலமானார். இவருக்கு நினைவு செலுத்தும் வகையில் கமலா நேரு கல்லூரி, கமலா நேரு பூங்கா, கமலா நேரு தொழில் நுட்ப கழகம்(சுல்தான்பூர்), கமலா நேரு மருத்துவமனை ஆகியவற்றுக்குப் பெயரிடப்பட்டுள்ளன.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,