அலெக்ஸ்சாண்டர் கிரஹாம் பெல் நினைவு நாள்
:
இன்று ஆகஸ்ட் 2, தொலைபேசியை கண்டு பிடித்த அலெக்ஸ்சாண்டர் கிரஹாம் பெல் நினைவு நாள் அலெக்சாண்டர் பெல் ஸ்காட்லாந்தில் எடின்பேர்க்கில் 1847 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி பிறந்தார். கிரகாம் பெல்லின் குடும்பம் கனடாவிற்குக் குடி பெயர்ந்தது
எட்டு வயதிலேயே கிரகாம் நன்றாகப் பியானோ வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்த பெல் பத்து வயதானபோது அவருக்குப் பள்ளி செல்ல நாட்ட மில்லாமல் போனதால் படிப்பதைவிட பியானோ வாசிப்பதிலும், ஒலி அலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் தனது நேரத்தை செலவு செய்தார். 1876 ஆம் ஆண்டு உலகின் முதல் தொலைபேசி பேசியது பெல் அவருடைய உதவியாளர் வாட்சன்என்பவரிடம் பேசினார். 1877 இல் கிரஹாம் பெல் தொலைபேசியை கண்டு பிடித்தார் தன் உதவியாளர் வாட்சனுடன் சேர்ந்து "பெல் தொலைபேசி கம்பனி" என்ற பெயரில் தொலைபேசி நிறுவனம் ஒன்றை நிறுவினார். தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக பிரெஞ்சு அரசு அவருக்கு வழங்கிய 50,000 பிராங்க் பரிசுத் தொகையைக் கொண்டு வோல்டா ஆய்வுச் சாலை (Volta Laboratory) என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவினார்
பெல் தொலைபேசியுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அரசு நிறுவனத்தின் மூலம் போட்டோ போன், ஆடியோ மீட்டர், மெட்டல் டிடக்டர், இன்டக்ஷன் பேலன்ஸ், வாய்ஸ் ரிகார்டிங் சிலிண்டர், கிராமபோன் போன்ற கருவிகளைக் கண்டு பிடித்தார். காது கேளாதோருக்குப் பேச்சுப் பயிற்சிக்கான சங்கம் ஒன்றை நிறுவினார். கண் தெரியாதவர்களுக்குப் பிரெய்ல் முறையைக் கண்டு பிடித்த ஹெலன் கெல்லருக்கு பெல் பல உதவிகளைச் செய்துள்ளார். தனிப்பட்ட முறையிலும், பிற அறிவியல் அறிஞர்களுடன் சேர்ந்தும் 59 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பெல் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் உள்ள பாடக் என்ற ஊரில் 1922 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி பெல் காலமானார் அவர் மறைந்த தினத்தன்று அமெரிக்காவில் உள்ள தொலைபேசிகள் அனைத்தும் 5 நிமிடங்கள் நிறுத்தப் பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
Comments