குள்ள உருவம்; தோளில் துண்டு

 


காஞ்சிபுரம் பச்சையப்பர் கல்லூரி 1950-ல் திருக்கச்சி நம்பித் தெருவில் திராவிடநாடு அச்சகத்திற்கு எதிரே இருந்த ஒரு மெத்தை வீட்டில் இருந்தது. கல்லூரியின் தொடக்கவிழா இக்கட்டிடத்திற்கு எதிரே போடப்பட்ட பந்தலில் நடந்தது. முதல்வர் குமாரசாமி ராஜா தொடக்கவுரை நிகழ்த்தினார். டாக்டர். ஏ.இலட்சுமனச்சாமி முதலியார் வாழ்த்துரை வழங்கினார். அவர்தம் ஆங்கிலப் பேச்சை அண்ணாதான் தமிழாக்கம் செய்தார். ஆம்.ஏ.இராமசாமி முதலியாரின் பேச்சை மொழிபெயர்த்து புகழ் பெற்றவர் அல்லவா? அக்கல்லூரியில் முதல் ஆசிரியனாக சேர்ந்த பெருமை எனக்குண்டு. அதற்குப் பின்வந்த திரு.மா.கி.தசரதன் அவர்கட்கும் பேரறிஞர் அண்ணா அவர்கட்கும் மிக நெருங்கியத் தொடர்பு ஏற்பட்டது. பேரறிஞர் அண்ணா பெயரை அறிய - அவரை முதன் முதல் - நேரில் பார்க்க - எனக்கு வாய்ப்பு கிடைத்தது 1944-ல். அந்த ஆண்டு சென்னை பச்சையப்பர் கல்லூரியில் நான் முதல் ஆண்டு மாணவன். ஒரு நாள் மாலை; ஆங்கில வகுப்பு, வரதராஜம் என்பவர் தமக்கே எளிய பாணியில் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார். மாலை கூட்டத்தில் பேச கல்லூரிக்கு வந்திருந்தார் அண்ணா; குள்ள உருவம்; தோளில் துண்டு; வகுப்பு நடப்பதை கண்டும் காணாதவராய் தாழ்வாரத்தில் நடந்து சென்றார் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த நாங்கள் வியப்புடன் பார்த்தோம். அன்று மாலை அறிஞர் அண்ணாவின் பெரும் பேச்சைக் கேட்டேன் - நாடும் ஏடும் அறிவும் ஆற்றலும் நிறைந்த பேச்சு.

(தமிழ்ப் பேராசிரியர். டாக்டர். ந.சஞ்சீவி)
இணையத்தில் படித்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி