பி.கே.எஸ். ஐயங்கார் காலமான நாளின்று


 பி.கே.எஸ். ஐயங்கார் காலமான நாளின்று

😰
தற்போது, உலக யோகா தினம் என்றெல்லாம் வந்த பிறகு யோக பயிற்சி மையங்கள், புற்றீசல் போல பெருகி விட்டாலும், ஆரம்ப காலத்தில் இப்பயிற்சிக்கு வித்திட்டவர் பி.கே.எஸ்.அய்யங்கார் தான்.
இவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் பலர்தான் தற்போது உலகம் முழுவதும் இந்த யோக கலையை பரப்பி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் புல்லுர் மாவட்டத்தில் பிறந்த கிருஷ்ணமாச்சாரிய சுந்தரராஜ அய்யங்கார், இளம் வயதில் காசநோய், மலேரியா, டை பாய்டு போன்ற நோய்களால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தார்.
இதையடுத்து பள்ளி ஆசிரியரான இவரது தந்தை கிருஷ்ணமாச்சாரியர், இவரை, 16 வயதில் யோகா வகுப்புக்கு அனுப்பினார். இவரது குரு டி.கிருஷ்ணமாச்சாரியர் அனைத்து யோக வித்தைகளையும் கற்றுக் கொடுத்து, அவரது உடல் நிலையை தேற்றினார்.
அத்துடன் பி.கே.எஸ்.அய்யங்காருக்கு ஆங்கில புலமை இருந்ததால், 18 வயதிலேயே இவரை புனேவுக்கு அனுப்பி, யோக கலையை கற்பிக்க செய்தார் இவரது குரு.
இந்த அய்யங்காரிடம் பயிற்சி பெற்றவர்களில் பிரபலமானவர், ஜெயபிரகாஷ் நாராயணன், ஜெ.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் ஆவர். நாட்டின் முதல் ஜனாதிபதியான ராஜேந்திர பிரசாத்தால் பாராட்டப் பெற்றவர் அய்யங்கார். யோகாசன கலையை, சீரிய முறையில் கற்றுத்தந்த அய்யங்காரை, போப் ஜான் பால், இந்தோனேசிய துணை அதிபர் முகமது ஹட்டா போன்றவர்கள் வாயார புகழ்ந்துள்ளனர்.
புகழ் பெற்ற வயலின் மேதையான யெகுதி மெனுஹிமுக்கு, 1952ல், அய்யங்காரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து. அய்யங்காரிடம் உள்ள திறமையை கண்டு, அவரை, மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து, பெல்ஜியம் அரசி போன்றவர்களிடம் பி.கே.எஸ்.அய்யங்காரை அறிமுகப்படுத்தி வைத்தார் மெனுஹிம். இவரது உதவியால், அய்யங்கார், பிரிட்டன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று, யோகாசனத்தை கற்பித்தார்.
கடந்த, 1966ல், இவர் எழுதிய, "லைட் ஆப் யோகா' என்ற புத்தகம், 18 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், யோகா குறித்து, 14 புத்தகங்கள் எழுதியுள்ளார்.
1996, 1998களில் இரண்டு முறை கடும் மாரடைப்பால் தாக்கப்பட்ட அய்யங்கார், தனது யோகா பயிற்சியைக் கொஞ்சம்கூட மாற்றிக் கொள்ளாமல் தொடர்ச்சியாகச் செய்துவந்தார். இறப்பதற்கு ஒரு மாதம் முன்புவரை ஆசனங் களைச் செய்துள்ளார். 92 வயதில் ஏழு மணி நேர யோகா பயிற்சிகளை வாரத்தின் ஏழு நாட்களிலும் கொடுத்து வந்தார். 95 வயதான போது இதே நாளில் மாரடைப்பால் காலமானார்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,