ஆடி பெருக்கின் சிறப்புக்கள்!*


 *தொட்டவை துலங்கும்... கடவுளே சீதனம் கொடுத்து நன்றி சொல்லும் ஆடி பெருக்கின் சிறப்புக்கள்!*



நம் முன்னோர்கள் காலம் தொட்டு, தற்போது வரை கொண்டாடப்பட்டு வரும் ஆடி பெருக்கு ஏன் கொண்டாட படுகிறது என்பதை பார்ப்போம். 


ஆடி பெருக்கு, ஆடி 18, தாலி பெருக்கு, என பல பெயர்களால் கொண்டாட பட்டு வரும் இந்த நிகழ்வு, காவிரி தாய்க்கு நன்றி சொல்லும் விதமாகவே நம் முன்னோர்களால் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாட பட்டு வருகிறது. 

 


குறிப்பாக விவாசாய பெருமக்கள், அவர்களின் வாழ்வாதாரமான விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் காவிரி தண்ணீருக்கு இன்றைய தினம், ஆற்றங்கரைக்கு சென்று காப்பரிசி கிளறி வைத்து, 5  வகையான கலவை சாதம் வைத்து, காவிரி ஆற்றில் மஞ்சள், பூ போன்ற மங்கள பொருட்களை விட்டு, தீபாராதனை காட்டி வணங்குவார்கள். 


மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும், நூலில் மஞ்சள் நனைத்து அந்த கயிற்றை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் கைகளிலும் கட்டி கொள்ளும் வழக்கமும் தற்போது வரை இருந்து வருகிறது. 


அதே போல் இந்த நாளில், தொட்டவை எல்லாம் பெருகும் என்கிற ஐதீகவும் உள்ளதால், தொழில் துவங்குவது, புது பெண்களின் தாலி பிரித்து கட்டுவது, ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் தாலி கயிறை மாற்றிக்கொள்வது போன்றவற்றை செய்கிறார்கள். பொதுவாக ஆடி மாதத்தில் சுப காரியங்கள் செய்யமாட்டார்கள். ஆனால் ஆடி 18 அன்று சுப காரியங்கள் செய்ய உகர்ந்தது என்றும் இன்றிய நாள் நல்ல காரியங்கள் செய்தால் அது பன்மடங்கு அதிகமாகும் என கூறுகிறது ஐதீகம்.


காவிரி தாய்க்கு நாம் மட்டும். நன்றி சொல்ல வில்லை, அந்த எம்பெருமானும் சீர் செய்து நன்றி சொல்வர். ஸ்ரீ ரங்கத்தில் உள்ள நம்பெருமாள் இன்றைய தினம் காவிரிக்கு சீர் செய்ய இன்றைய தினம் ஆற்றங்கரைக்கு வருவார். பின்னர் காவிரி தாய்க்கு புடவை, மஞ்சள், குங்குமம், தாலி, பழங்கள், மலர்கள்... போன்றவற்றை சீதனமாக கொடுப்பார்.


என்றென்றும் மக்களை வலமாக வைத்து கொள்ள வேண்டும் என இந்த சீதனங்களை கொடுத்து காலை முதல் மாலை வரை காவிரியின் அழகை எம்பெருமான் ரசித்து விட்டு செல்வது வழக்கம். 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,