பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான குல்தீப் நய்யார் காலமான தினமின்று
பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான குல்தீப் நய்யார் காலமான தினமின்று

குல்தீப் நய்யாருக்குக் கிடைத்த வாய்ப்பு இந்தியாவில் வேறு எந்தப் பத்திரிகையாளருக்குமே கிடைத்திருக்க முடியாது சுதந்திரத்துக்குப் பிறகான இந்திய வரலாற்றில் நடந்த பல முக்கியமான விஷயங்களை அருகில் இருந்து பார்த்திருக்கிறார்; ஏன் அவரே அனுபவித்திருக்கிறார்.
இந்திரா காந்தியின் எமெர்ஜென்சி காலத்தில் அதற்கு எதிராக இருந்ததால், சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்தியாவின் முக்கியமான ஆங்கிலப் பத்திரிகைகளில் எடிட்டராக இருந்துள்ளார்.
பிரிட்டனுக்கான இந்தியாவின் தூதராக இருந்துள்ளார். இவர் நேருக்கு நேர் சந்தித்துப் பேசாத இந்தியத் தலைவர்களே இல்லை எனலாம்.
அப்பேர்பட்டவர் இதே ஆகஸ்ட் 23 (2018)ல் காலமானார்
Comments