வயது குறித்த கவனம்

 


வயது குறித்த கவனம் எல்லோருக்கும் உண்டு. பால்ய காலத்தில் சீக்கிரம் கூட வேண்டும் என்றிருந்த ஏக்கம், ஒரு கட்டத்திற்குப் பிறகு கூடாமல் இருந்தால் நன்றாக இருக்குமென மாறி விடுகிறது. வயது கூட வேண்டாம் என்று விரும்புவோர் புத்திசாலித்தனமெனக் கருதி ஒப்பனைகள் மூலமாக தன்னை இளமையான தோற்றத்தில் காட்டிக் கொள்வர். அடுத்தது தனக்கு வயதாகவில்லை என்று அடிக்கடி சொல்வது. வயது குறித்துப் பேச்சு வந்தால், வயது என்பது வெறும் எண்தானே எனச் சொல்வது.


வயதுகளின் எண்ணிக்கையை மட்டுமே பக்குவத்தின் அடையாளமாக வெளிப்படுத்துவோரும் உண்டு. சிலருக்கு வயது என்றால், இன்னும் சிலருக்கு அவர் வகிக்கும் பொறுப்பு. குறிப்பிட்ட பொறுப்பில் இருப்பதன் காரணமாகவே தனக்குப் பக்குவம், உரிமை வந்து விட்டதாகக் கருதுகின்றனர்.

வயதை அனுபவங்களின் ஒப்பீடாக வைத்துக் கொள்வதில் எனக்கு மறுப்பேதுமில்லை. வயது கூடியிருப்பதால் மட்டுமே ஒருவர் சொல்வதை மறுக்காமல் ஒப்புக் கொள்வதில் உடன்பாடு இல்லை. ஆனால் வயதிற்கும் அனுபவத்திற்கும் இடையே கடும் முரண்பாடுகளை வைத்திருக்கும் மனிதர்களையும் வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்துத்தான் ஆக வேண்டும். ஒன்று இணைந்து பயணிக்கலாம். அல்லது விலகிப் பயணிக்கலாம். ஆனால் அவர்கள் இருப்பார்கள்.

'திரையெனும் திணை' நூலில் ஈரோடு கதிர்
thanks kandasay.r

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி