ஓம்கார ஆசனத்தில் உலக சாதனை

 


பூந்தமல்லியில் 6.14 நிமிடம் ஓம்கார ஆசனம் செய்து 7 வயது சிறுவன் உலக சாதனை*


பூந்தமல்லி: சென்னை அடுத்த ஆவடி பருத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாபுரவி. யோகா மாஸ்டர். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் தர்ஷித் (7) பூந்தமல்லியில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதில் இருந்தே தர்ஷித் யோகாசனங்களை கற்று வருகிறார். இந்நிலையில், யோகாசனங்களில் மிகவும் கடினமான ஆசனமான ஓம்கார ஆசனத்தில் உலக சாதனை படைக்கவேண்டும் என தர்ஷித் தீவிர பயிற்சி எடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பூந்தமல்லியில் தர்ஷித், தலையில் கண்ணாடி டம்ளரில் தண்ணீர் வைத்தவாறு 6.14 நிமிடங்கள் ஓம்கார ஆசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.


சிறுவனின் சாதனை நோபல் வேர்ல்ட் ரிக்கார்டு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இவரது சாதனையை நோபல் வேர்ல்ட் ரிக்கார்ட் அமைப்பினர் நேரில் வந்து பதிவு செய்தனர். பின்னர், சிறுவனுக்கு உலக சாதனை சான்றிதழ் வழங்கினர். இதற்கு முன்பு ஓம்கார ஆசனத்தில் 2.45 நிமிடங்கள் இருந்தது சாதனையாக இருந்தது. தர்ஷித் சாதனையை முறியடித்ததுடன் 3 மடங்கு நேரம் அதிகமாக ஓம்கார சாதனை செய்து அசத்தியுள்ளார். தர்ஷித்தின் சாதனையை யோகா மாஸ்டர்கள், உறவினர்கள்  பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்....

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,