மாப்பசான்


 மாப்பசான் பர்த் டே டுடே!

💐
மாப்பசான் இருபதாம் நூற்றாண்டுக்கு முன்னரே சிறுகதை உலகில் பல்வேறு சாதனைகளை புரிந்துவிட்டு மறைந்து விட்ட ஆளுமை. நவீன சிறுகதையின் தந்தைகளில் ஒருவர் என்று அவரை உறுதியாக குறிக்கலாம்.
அப்பாவை இளம் வயதிலேயே இழந்து அம்மாவின் அன்பில் மட்டுமே வளர்ந்தவர் அவர். பள்ளியில் ஆசிரியர் மீது ஸ்கேட்டிங் போர்டோடு ஏறி விளையாடினான் என்று பள்ளியை விட்டு நீக்கினார்கள். அப்படி இருந்தாலும் அவரின் அம்மா அவருக்கு ஊக்கம்
தந்து பக்கபலமாக இருந்தார்.
பிரான்ஸ் நாட்டை சின்னபின்னம் ஆக்கிய 1870 ஆம் ஆண்டின் போரை தன் கண்களால் கண்டது அவரின் எழுத்தில் பெரிய தாக்கத்தை உண்டு செய்தது. அதே போல சிபிலிஸ் என்கிற கொடிய நோயின் தாக்கமும் அவருக்கு இருந்த படியால் அதுவும் அவரின் எழுத்தில் வெளிப்பட்டது. அவரின் முன்னூறு சிறுகதைகளையும் வெவ்வேறு பாணியில் உலகம் முழுக்க பலபேர் பிரதியெடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
அவரின் குண்டுப்பெண் என்கிற கதை பிரான்ஸ் நாட்டின் குண்டான விலை மாது ஒருவள் தொடர்வண்டியில் போகிற பொழுது ப்ருஷ்ய தளபதி அவளை தன்னுடைய ஆசைக்கு இணங்க சொல்வான். அதற்கு அவள் தன் தேசபக்தியோடு மறுப்பாள். ட்ரெய்ன் நகர வேண்டும் என்று சக பிரயாணிகள் அவளை ஒப்ப வைப்பார்கள். அவனின் ஆசை தீர்ந்து அவள் வெளியே வந்ததும் எல்லாரும் அவளை கேவலமாக பார்ப்பதும்,அன்னியம் போல விலகிப்போவதையும் மாப்பசான் எழுத்தில் படிக்கும் பொழுதே கண்ணீர் சுரக்கும்.
போலியான ஆடம்பரம் எத்தகைய ஆபத்துகளை உண்டு செய்கிறது என்பதை ஒரு போலி வைர நெக்லசை கடன் வாங்கி தொலைத்து இருபது ஆண்டுகளுக்கு மேலே உழைத்து தங்களின் மகிழ்ச்சியான இளமைக்காலத்தை இழந்த இணையின் கதையான நெக்லஸ் கதையும் மறக்கவே முடியாத ஒரு கதை.
மாப்பசான் நாற்பத்தி மூன்று வயதில் உடல் மற்றும் மனநலம் கெட்டு இறந்து போனார். அவர் ஈஃபில் கோபுரம் எழுந்த பொழுது அதை விரும்பாத எத்தனையோ பேரில் ஒருவராக இருந்தார். அப்படி அதை வெறுத்தாலும் அந்த கோபுரத்தில் இருந்த உணவகத்தில் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார் அவர். “ஏன் இந்த
இரட்டை வேடம் ?” என்று கேட்டார்கள் !
அதற்கு அவர் இப்படி பதில் சொன்னார், “இந்த பாரீஸ் நகரத்தில் இங்கே உட்கார்ந்தால் மட்டும் தான் இந்த வெறுப்பைத்தரும் கோபுரம் கண்ணில் படாமல் இருக்கிறது !”
மாப்பசான் ஈபில் கோபுரம் போல உயர்ந்து நிற்பவர்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி