அடக்கமாக, அமைதியாக, எளிமையாக
பார்க் பேர் கண்காட்சி டிசம்பர் மாதத்தில் நடக்கும். கண்காட்சியில் ஒரு நாள் எங்கள் குழுவினரின் அங்கையற்கண்ணி நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. உட்காருவதற்கு அப்போதெல்லாம் நாற்காலிகள் போடப்படுவதில்லை. கீழேதான் உட்கார வேண்டும். டிசம்பர் மாதம் பனிக்காலம். ஆகையால் தலையில் ஒரு துண்டைச் சுற்றுக் கொண்டு முன்னால் வந்து கீழேயே உட்கார்ந்துவிட்டார் அண்ணா.
நான் ஓடிப்போய் வரவேற்கிறேன். நான் தலமைத் தாங்க வரவில்லை. நாடகம் பார்ப்பதற்காகத்தான் வந்திருக்கிறேன். நீங்கள் சென்று நாடகத்தை நடத்துங்கள் என்று சிரித்துக்கொண்டே என்னை அனுப்பி வைத்துவிட்டார்கள்.
நான் இதனைச் சொல்வதற்கு காரணம் இருக்கின்றது. நான் ஆங்கிலப் படங்கள் பார்ப்பதற்கு (சென்னையில் உள்ள) ஓடியன் தியேட்டருக்குப் பலமுறை சென்றிருக்கிறேன். அப்போது பலமுறை அண்ணாவை அங்கு பார்த்திருககிறேன். அவர் எப்போது வந்தார் என்பதே தெரியாது. வணக்கம் தெரிவித்தால் சிரித்துக் கொண்டே வணக்கம் தெரிவிப்பார். அவ்வளவுதான். அவர் சிறிது விரும்பினால் கூட, அப்போது இருந்த புகழுக்கு ஆர்பாட்டம் செய்யலாம். தியேட்டரில் உள்ள எல்வோரும், யார் வந்திருக்கிறார்கள், என்று திரும்பிப் பார்க்கும்படி சலசலப்பை உண்டாக்கலாம். எதுவும் இல்லாமல், எவ்விதமான பந்தாவுமில்லாமல் வருவது எனக்கு அவரிடத்தில் மிகுந்த மதிப்பை எற்படுத்தியது.
எனக்கு அவரிடம் மிகவும் பிடித்தது, எவ்வளவோ உயர்ந்த நிலையில் இருந்தாலும் அடக்கமாக, அமைதியாக, எளிமையாக இருந்ததுதான்.
(நாடகக் காவலர். ஆர்.எஸ்.மனோகர்)
இணையத்தில் படித்தது
Comments