வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பிறந்த நாள்
இன்று இந்தியாவில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி, உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற வைத்த பெருமைக்குரிய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பிறந்த நாள் (1925-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ) கும்பகோணத்தில் பிறந்த இவர், நாட்டின் முதுகெலும்பாக உள்ள வேளாண் துறையில் அபரிமித வளர்ச்சி ஏற்படுத்தி, உலக அரங்கில் இந்தியாவை வியந்து பார்க்க வைத்தவர்.
இந்திய வேளாண் உற்பத்தி பொருள்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சூழ்நிலையை ஏற்படுத்தினார். இந்திய மண்ணில் விதைத்து, அறுவடை செய்து புரட்சிபுரிந்துவிட்டு நாடாளுமன்றத்திலும் முத்திரை பதித்த எம்.எஸ். சுவாமிநாதன் எந்த ஆடம்பரமும் இல்லாத எளிமையான மனிதர். பட்டினியில்லாத இந்தியாதான் என் கனவு என்கிறார் இந்த வேளாண் விஞ்ஞானி. இந்தியாவிலும் உலகின் பலவேறு நாடுகளிலும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்கள் வழங்கியுள்ளன
• தேசிய, சர்வதேச அளவில் 41 விருதுகளை பெற்றவர்.
• பெருமைமிகு மகசேசே விருது
• கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் 'வால்வோ' விருது. மற்றும் பல !
Comments