சந்திரபாபு
சந்திரபாபு பர்த் டே டுடே!💐
தூத்துக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரரான ஜோசப் ராட்சிக் என்பவரின் மகன் தான் சந்திரபாபு. அவர் பிறந்து சில நாட்களிலேயே விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். குழந்தை தப்புமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. தாயும் தகப்பனும், “ஏசுவே இந்தக் குழந்தை நீர் எமக்குக் கொடுத்த பிச்சை, குழந்தையை உயிர் பிழைக்கச் செய்தருளும், குழந்தைக்குப் பிச்சை எனப் பெயரிடுகிறோம்’ என்று முழந்தாளிட்டு இயேசுவிடம் மன்றாடினர். அந்த மன்றாட்டத்தினால் தப்பிப் பிழைத்த குழந்தைக்கு ஜோசப்பிச்சை எனப் பெயரிட்டனர். சந்திர பாபுவுக்கு முன்னால் ஜோசப் பிச்சையின் முதல் எழுத்துக்கள் ஒட்டிக் கொண்டதால் ஜே.பி. சந்திரபாபு ஆனார்.
1965ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் யுத்தத்தின் போது இந்திய இராணுவ வீரர்களுக்கு உற்சாகமூட்டுவதற்காக தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் எல்லைப் பகுதிக்குச் சென்று இசை நிகழ்ச்சி நடத்தினார்கள். சிவாஜி, பத்மினி, சாவித்திரி, ஜெயலலிதா, கண்ணதாசன், எம்.எஸ். விஸ்வநாதன் ஆகியோருடன் சந்திரபாபுவும் சென்றிருந்தார். அவர்கள் சென்னை திரும்பும் வழியில் இந்திய ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனைச் சந்தித்தனர்.
அப்போது “”பிறக்கும்போதும் அழுகின்றான் இறக்கும் போதும் அழுகின்றான்” என்ற பாடலை சந்திர பாபு பாடினார். அபாடலில் மெய் மறந்த ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் “”அடடா என்ன அர்த்தம் என்ன அர்த்தம்” என்று பாராட்டினார். அவரின் பாராட்டுதலினால் உற்சாகமடைந்த சந்திரபாபு ஜனாதிபதியின் மடியில் உட்கார்ந்து தோளில் கைபோட்டு தாடையைப் பிடித்து “”நீ ரசிகன்டா கண்ணு” என்று பாராட்டினார்.

 From The Desk of கட்டிங் கண்ணையா

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,