சர்வதேச பீர் நாள்

 


இன்று எல்லோருக்கும் “பீரை” பரிசாக கொடுத்து ”சியர்ஸ்” சொல்லுங்கள்!

👀 சர்வதேச பீர் நாள்🍻
🎯சர்வதேச பீர் தினம் (IBD) ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
பீர் தினத்துக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது, கலிபோர்னியாவில் உள்ள சாந்தா குரூஸ் என்ற இடத்தில்தான்.
இங்குதான் இளைஞர்கள் தங்கள் நண்பர்களுடன் பீர் முன்னிலையில் ஜாலியான இந்த புதுமையை தொடங்கினார்கள்
2007 ஆம் ஆண்டிலிருந்து இது சர்வதேச தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த அத்தியாவசிய தினம் கொண்டாடப் படுவதுக்கு காரணமாக, அங்கு உள்ள பீர் குடிகாரர்கள் மூன்று முக்கிய கோட்பாடுகளை முன் வைக்கின்றனர்.
1. நண்பர்களுடன் சேர்ந்து பீர் சேகரிப்பதுக்கும், அதை சுவைப்பதற்குமான நாள்.
2. பீரை காய்ச்சுவதற்கும், அதை ஊற்றிக் கொடுப்பதுக்குமான பொறுப்பு இந்த கொண்டாட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்படுகிறது.
3. பீர் என்ற பேனரின் கீழ் இந்த உலகம் ஐக்கியப்பட வேண்டும், அதற்காக வருடத்தில் ஒரே ஒரு நாளை எல்லா நாடுகளும் ஒதுக்கிக் கொண்டாடுங்கள். என்று உரக்க இந்த தினத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இந்த தினத்தில் பீரை பரிசாக கொடுங்கள் பீரை சேர்ந்து ஊற்றி பங்கிட்டு அருந்துங்கள். பீர் தயாரிப்பு மற்றும் தொழில் சார்ந்தவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.
இந்த கொண்டாட்டம் 6 கண்டங்களிலும் 50 நாடுகளில், 207 நகரங்களில் முக்கியத்துவமளித்து கொண்டாடப்பட்டு வருகிறது. இது 2012 வரையில் ஆகஸ்ட் 5 ம் திகதிதான் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், சிலசமயங்களில் விடுமுறை அல்லாத நாட்களில் வருவதால் பலர் கொண்டாட நினைத்தாலும் பணியின் பளு நிர்ப்பந்திப்பதால் கொண்டாட முடிவதில்லை.அதனைத் தொடர்ந்து குடிகாரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆகஸ்ட் முதல் வெள்ளிக்கிழமையாக மாற்றப்பட்டது.
சாதாரணமாக ஒரு லோக்கல் பாரில் தொடங்கிய பீர் தின கொண்டாட்டம், உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது, என்றால் அவர்களுடைய முயற்சிக்கு கிடைத்திருப்பது பெரிய வெற்றிதான்.அமெரிக்கா, அவுஸ்ரேலியா, கனடா, இங்கிலாந்து பிரான்சு, ஆஸ்திரியா பெரு, உகண்டா, மலேசியா, அரபு எமிரேட்ஸ், இந்தியா என இன்னும் பல நாடுகள் கொண்டாடி வருகின்றனர்
ஹூம்ஒவ்வொரு நாடுகளிலும் எத்தனையோ ஆயிரக்கணக்கான உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் கூட, உலகின் சரியான தீர்வுக்காக எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றன.ஆனால், இந்த பீருக்கு வசப்பட்டு, உலகம் இவ்வளவு பெரிய அங்கீகாரத்தை எளிதாக கொடுத்திருப்பது ஆச்சரியம் தான்.🍻🍻🍻

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,