தோழர்_பூபேஷ் குப்தாவின் நினைவுநாள்

 


இந்திய நாடாளுமன்றத்தின் தந்தை என போற்றப்படுபவரும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், வங்கத்தில் கம்யூனிஸ்ட்இயக்கத்தை வளர்த்தெடுத்த ஒப்பற்ற தலைவருமான தோழர்_பூபேஷ் குப்தாவின் நினைவுநாள் இன்று ஆகஸ்ட் 6, 1981 .

பேச்சாளராகவும் எழுத்தாளாராகவும் இதழாசிரியராகவும் விளங்கியவர். மாணவராக இருக்கும்போதே இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டார். மேல் கல்வியின் பொருட்டு இங்கிலாந்துக்குச் சென்ற பூபேஷ் குப்தா அங்கு பொதுவுடைமை இயக்க மாணவர்களுடன் தோழமையுடன் செயல்பட்டார்.

சட்டப் படிப்பு முடித்து இங்கிலாந்திலிருந்து திரும்பிய குப்தா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1943 ஆம் ஆண்டில் வங்கத்தில் கடும் பசியும் பஞ்சமும் நிலவியது. அப்போது பூபேஷ் குப்தா நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். 1952 முதல் மாநிலங்களவையில் உறுப்பினராகி தம் வாழ்வின் இறுதிக் காலம் வரை அப்பதவியில் இருந்தார். மாநிலங்களவை 100 ஆவது கூட்டம் நிகழ்ந்தபோது பூபேஷ் குப்தாவின் நீண்ட கால பாராளுமன்றச் சேவையைப் பாராட்டி இவருக்குச் சிறப்பு செய்யப்பட்டது. அரசியல், பொருளியல் தொடர்பான சிக்கல்களைப் பற்றிக் கட்டுரைகளைப் பல இதழ்களில் எழுதி வந்தார். பன்னாட்டு பொதுவுடைமை இயக்கக் கூட்டம் புச்சரெச்ட்டில் நடைபெற்ற போது அக்கூட்டதில் கலந்து கொண்டார். பல்வேறு நாடுகளில் நிகழ்ந்த பொதுவுடைமை மாநாடுகளில் கலந்து கொண்டார்.

தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்படுவது தொடர்பாக 1968 ஆம்  ஆண்டு நாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினருமான பூபேஷ் குப்தா அந்த மசோதாவை அறிமுகம் செய்து பேசினார். அப்போது, “வரலாறு, மொழி, கலாசார அடிப்படைகளுக்கு இசைவாக தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கருத்து மெட்ராஸ் மாகாணம் மற்றும் தேசத்தின் மற்ற பகுதகளில் உள்ள மக்களிடம் ஆழமாக இருக்கிறது” என்றார் பூபேஷ் குப்தா. அந்த விவாதத்தில் அண்ணா உள்பட பலர் கலந்துகொண்டனர். மொழி பற்றி கம்யூனிஸ்ட்டுகள் கொள்ளும் அணுகுமுறை அறிவியலை அடிப்படையாக்க் கொண்டது.  உணர்ச்சி வயப்பட்டது அன்று.  கம்யூனிஸ்டுகள் பிறிமொழிமேல் அழுக்காறு கொள்பவர்கள் அல்லர்.  பிறமொழிகளை மதிப்பவர்கள்  என்பதற்கு வங்க மொழியாளரான பூபேஷ்குப்தா, தமிழ்பால் காட்டிய ஆர்வம் இதற்குச் சான்று


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,