எப்படி நீ மட்டும் எப்படி …இப்படி ஃப்ரெஷ்ஷா இருக்கே?/கவிதை




 எப்படி நீ மட்டும் எப்படி …இப்படி ஃப்ரெஷ்ஷா இருக்கே?

***********************************************
நான் மணல்வீட்டில் குடியிருக்கிறேன்…
பேரன்பின் மணலில்
நம்பகத்தன்மையின் ஈரம் குழைத்து
மனகரையோரம் கட்டி வசிக்கும் மணல் வீட்டை
எந்த அலையாலும் கரைக்கமுடியாது என்பதாலேயே…
நேற்றுக்கூட பாரேன்…
ஒரு தோழி நள்ளிரவைக் குழைத்து..
”டேய் ..தற்போது தூக்கத்தை தானமாய் தரும் மாத்திரை இல்லாவிடினும்
உன் செயலைக் காட்டும் இந்த முகநூல் தகவல்களை படிக்கிறேன்
இப்போதைக்கு இது போதும் என்னைத் தாலாட்ட..”
என்று குறுஞ்செய்தி அனுப்புகிறாள்.
படித்தபின்… சொற்களைத் தியானித்தபடியே இருக்கிறேன்..
தியானத்தில்…
பழைய ஈகோவை வளையமாக்கி
என் சிறுவன் ஓட்டிக்கொண்டுபோகிறான்.
எம் அகந்தையை அந்த வெள்ளைக்காக்கை கொத்தி தின்கிறது
சருகாக துடிக்கும் வாழ்வின் மீது தனது உயிர்ப்பை கருணையோடு அப்பிவிட்டு போகிறது என் ஆதிகர்மா..
இது போதாதா...இந்த இரவுக்குள் எழுதிமுடித்து..
நாளை உங்களிடம் ஒரு கவிதையோடு வருவேன்.
....இப்படி தான் வாழ்வை துருப்பிடிக்காமல்
மலர்ச்சியோடு .வைத்துக் கொள்கிறேன்..
பின் குறிப்பு: உனக்கு மண்டியிட தெரிந்து இருந்தால் இன்னும் வெகு சுலபம்.. சரணாகதியை தான் அப்படி சொல்கிறேன்.யாரிடம் எதன் பொருட்டு என்பது அரூப சூத்திரம்

அமிர்தம் சூர்யா



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,