நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி



நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி நினைவு நாள்!🥲
திரைகானம் பாடிய நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி, கும்பகோணத்தில் பிறந்தவர். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பனி, டி.கே.எஸ். நாடக குழு, கிருஷ்ண நாடகசபா (இவரது சொந்த சபா) ஆகிய நாடக சபாக்களில் நடித்து தம் நடிப்பை வளர்த்துக் கொண்ட இவர், நாடகத்தைக் கண்ணாகப் போற்றியவர். தனது தந்தை காலமான அன்றும் கூட, தந்தையின் இறுதிக் கடன்களை முடித்த கையோடு, அன்றிரவே நாடகத்தில் நடித்தரிவர்.
இவர் சார்ந்திருந்த திராவிட இயக்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, 1960 ஆம் ஆண்டிலேயே எம்.எல்.சி. பதவி வகித்தவர் இவர். அறிஞர் அண்ணா இவருக்கு “நடிப்பிசைப் புலவர்’ என்ற பட்டமளித்தார். நடிப்பிசைப் புலவரை அனைவரும் “அண்ணாவின் செல்லப்பிள்ளை’ என்று செல்லமாக அழைத்தார்கள்.
நீதிபதி, பூம்பாவை, பில்ஹணா, கங்கணம், காஞ்சனா, விஜயகுமாரி, வேலைக்காரி, ஓர் இரவு, சொர்க்க வாசல், செல்லப் பிள்ளை, அவன் அமரன், மேனகா (1955), கன்னியின் சபதம், துளிவிஷம், சுகம் எங்கே ஆகிய 15 படங்களில் கே.ஆர்.ராமசாமி கதாநாயகனாக நடித்துள்ளார்.இவர் நடித்து 100 நாட்கள் ஓடிய திரைப் படங்கள், குமாஸ்தாவின் பெண், பூம்பாவை, கிருஷ்ண பக்தி, வேலைக்காரி, சொர்க்கவாசல் ஆகியவை.
 From The Desk of கட்டிங் கண்ணையா

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,