வெள்ளையனே வெளியேறு இயக்கம்

 வரலாற்றில் இன்று - வெள்ளையனே வெளியேறு இயக்கம் (Quit India Movement) 1942 இல் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் ஆகும். இவ்வியக்கம் மகாத்மா காந்தியின் இந்திய விடுதலைக்கான அழைப்பினைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டது. இது ஆகஸ்ட் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது.பிரித்தானிய அரசை அடிபணிய வைத்து பேச்சுவார்த்தை மேசைக்கு அழைப்பதே இதன் முக்கிய நோக்காக இருந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் ஆகஸ்ட் 8, 1942இல் கூட்டிய மாநாட்டில் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல தீர்மானம் நிறைவேற்றியது. மாநாட்டில் பேசிய மகாத்மா காந்தி, செய் அல்லது செத்து மடி என்ற கோஷத்தை வலியுறுத்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார். இதனை ஒடுக்க நினைத்த பிரிட்டிஷ் படை, மறுநாள் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களை சிறைப்பிடித்தது. ஓராண்டுக்குள் இந்த இயக்கத்தையும் ஒடுக்கி விட்டது. ஆனால், இந்த இயக்கம் ஆரம்பித்த பிறகுதான், விடுதலைப் போராட்டம் வெகுஜனப் போராட்டமாக உருவெடுத்தது சுதந்திரத்திற்கு வித்திட்டதுComments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,