பாலுத் தேவர் – சத்யராஜின் நடிப்புப் பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்
பாலுத் தேவர் – சத்யராஜின் நடிப்புப் பயணத்தில் மிக முக்கியமான மைல்கல் இந்தப் பாத்திரம். தமிழ் பார்வையாளர்களாலும் அத்தனை எளிதில் மறக்க முடியாத கேரக்டர். ‘கடவுளை மற, மனிதனை நினை’ என்று முழங்கிய பெரியாரின் பிரதிநிதித்துவக் குரலாகவே படம் முழுவதும் ஒலித்தார் சத்யராஜ். வில்லன் பாத்திரங்களிலிருந்து விலகி மெல்ல ஹீரோவாக வளர்ந்து கொண்டிருந்த காலகட்டமாக இருந்தாலும் ஒரு முதியவரின் பாத்திரத்தை ஏற்க சத்யராஜ் தயங்கவில்லை. பாரதிராஜாவின் மீது வைத்திருந்த நம்பிக்கைதான் இதற்குக் காரணமாக இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை. ஏறத்தாழ படத்தையே தூக்கிச் சுமந்தவர் பாலுத் தேவர்தான்.
நன்றி: சினிமா விகடன்
Comments