பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கிய தேங்காய் பால்

 


பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கிய தேங்காய் பால்!!♥️


தேங்காய் பால் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. புரதச் சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, அனைத்து வகை பி கம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்துகள் என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில்  உள்ளன. தேங்காய்ப்பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப் படுகிறது. குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் தேங்காய் பாலில் உள்ளன. சிறுநீரக கற்கள் இருக்கும் நோயாளிகள் கூட பாலை அருந்தலாம்.   தேங்காய் பாலில் கசகசா, பால் தேன் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் மட்டுப்படும். தேங்காய் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து  கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றும். தேங்காய் பாலில் காரத்தன்மை உள்ளதால் அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்று  புண்களுக்கு தேங்காய் பால் மிகவும் சிறந்தது.


உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் இதில் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது. மாதவிடாய் நின்றுவிட்ட பெண்கள் கண்டிப்பாக 500 மி.லி. வரைக்கும் பால் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்.   எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. இத்தகைய கால்சியம் வயது அதிகரிக்கும் போது குறைய ஆரம்பிக்கும். தேங்காய் பாலில் உள்ள கால்சியம் உங்களின் உடலை பராமரிக்கும்.   இரத்தக் கொதிப்பு கட்டுப்பாட்டிற்கும், உடல் பருமன் குறைவதற்கும், இதய நோயிற்கும், புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளவர்களும் பாலை  தினமும் எடுத்துக் கொள்ளலாம்.   பாலில் வைட்டமின் பி12 உள்ளது. இந்த வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி