ஸ்ரீ நாராயண குருவின் வது பிறந்த நாளின்று.

 


ஸ்ரீ நாராயண குருவின் வது பிறந்த நாளின்று.

💐
மனிதர்கள் தங்களுக்குள் மதத்தாலும், சாதியாலும் பிரிந்து மனம் வேறுபட்டு நின்ற காலத்தில் ’மனிதர்கள் எல்லோரும் சகோதரர்களே! அவர்களுக்கு ஒரு சாதி, ஒரு மதம், ஒரு தெய்வம் போதும்’ என்ற அறைகூவலை எழுப்பி, தீண்டாமை வேற்றுமையை, பிரிவினையைப் போக்கப் பாடுபட்ட மகான் ஸ்ரீ நாராயண குரு.
கேரளாவில் தோன்றிய நாராயணகுரு ஆன்மீகத்துறை மட்டுமல்லாது கல்வித்துறையிலும் பல்வேறு சீர்த்திருத்தங்கள் செய்தவர். உயர்சாதியினர்க்கு எதிராக கல்வி, பொருளாதாராம், ஆன்மீகம் என அனைத்திலும் தாழ்த்தப்பட்டவர்கள் வலிமை பெற்று விட்டாலே போதும் சமச்சீர் சமுதாயம் உருவாகி விடும் என்ற எண்ணம் கொண்டவர். அதற்காகவே உழைத்தவர்.
கல்வி கற்பது அனைவரது உரிமை என்று சொல்லி, சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டிருந்தவர்கள் கல்வி கற்பதற்காக பல்வேறு கல்விக்கூடங்களை உருவாக்கியவர். சாதி, மத பேதமில்லாமல் அனைவரும் வந்து தரிசித்துச் செல்வதற்காக சிறந்த வழிபாட்டுத் தலங்களை ஏற்படுத்தியவர்.ஸ்ரீ நாராயண குரு
நாராயண குரு ஆரம்பகாலத்தில் கன்யாகுமரி அருகே உள்ள மருத்துவாமலையில் சில மாதங்கள் தங்கி தவம் செய்து வந்தார். பெரும்பாலும் மௌனமாக தவத்தில் ஆழ்ந்திருப்பதும், விழித்திருக்கும் போது யாரேனும் உணவு கொடுத்தால் உண்பதும் அவர் வழக்கம். இல்லாவிட்டால் அம்மலையில் உள்ள கிழங்குகளை உண்பார். சமயங்களில் பட்டினியாகவும் இருந்து விடுவார்.
ஒருநாள்…. காலை முதல் நீண்ட தவத்தில் ஆழ்ந்திருந்தா நாராயண குரு. அவர் கண் விழித்தபோது நள்ளிரவாகி விட்டிருந்தது. கடுமையான இருள் வேறு எங்கும் சூழ்ந்திருந்தது. நாராயண குருவுக்கோ நல்ல பசி. காட்டின் உள்ளே சென்று கிழங்குகளைத் தேடியும் உண்ண முடியாத நிலை. சோர்வுற்று அவர் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது அங்கே ஒரு மனிதன் வந்தான்.
அவன் ஒரு பிச்சைக்காரன். தொழுநோயாளியும் கூட. ”என்ன சாமி பசிக்குதா, இதோ என்கிட்ட சாப்பாடு இருக்குது. நீ இதையெல்லாம் சாப்பிடுவியா?” என்றான்.
அதைக் கேட்ட நாராயண குரு மிகவும் மனம் வருந்தினார். அவன் நிலைக்காக மனம் இரங்கினார். பின் அவனிடம், ”அப்பா, உணவு கொடுப்பவர் உயிர் கொடுப்பவர் அல்லவா? நீ எனக்கு அமிர்தத்தை அல்லவா கொண்டு வந்திருக்கிறாய். வா, இரண்டு பேரும் சேர்ந்தே சாப்பிடலாம்” என்று சொல்லி, எந்த வித மன வேறுபாடும் இல்லாமல் அவனுடன் அமர்ந்து உணவை உண்டார்.
மறுநாள் அவர் விழித்தெழுந்து பார்த்தபோது அந்தத் தொழுநோயாளியைக் காணவில்லை. தன் மன உறுதியைப் பரிசோதிக்கவே அந்தத் தொழுநோயாளியை இறைவன் அனுப்பியிருக்கிறான் என்பதை உணர்ந்த நாராயண குரு, இதுபோன்று மனதாலும், உடலாலும் தாழ்வுற்றுக் கிடப்பவர்களை முன்னேற்றுவதே தன் வாழ்நாள் லட்சியம் என்று உறுதி பூண்டார்.
சாதி, மதம், இனம், மொழி என எல்லாவற்றையும் கடந்து, எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, மக்கள்பால் மனிதநேயம் மிக்கவர்களாக இருப்பதால் தான் இதுபோன்ற புனிதர்கள் மகான்கள் என்றழைக்கப்படுகின்றனர்.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி