பஸ்களில் பெண் பயணிகளை ஆண் பயணிகள் முறைத்துப் பார்க்க கூடாது-

 பஸ்களில் பெண் பயணிகளை ஆண் பயணிகள் முறைத்துப் பார்க்க கூடாது-புதிய மோட்டார் வாகன விதி

பஸ்களில் பெண் பயணிகளை ஆண் பயணிகள் முறைத்துப் பார்க்க கூடாது தமிழ்நாடு புதிய மோட்டார் வாகன விதியில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை பஸ்களில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு ஆண்களால் சில இடங்களில் பிரச்சினை ஏற்படுகிறது. இதை தடுப்பதற்காகவும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி *பெண் பயணிகளை ஆண் பயணிகள் முறைத்துப் பார்க்க கூடாது. கூச்சலிடக்கூடாது, விசிலடிக்க கூடாது. *பெண் பயணியிடம் அத்துமீறல் செய்தால் ஆண் பயணியை வாகனத்தில் இருந்து இறக்கிவிடலாம். *நடத்துனர் எச்சரிக்கையை மீறும் ஆண் பயணியை வழியில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்கலாம். * ஆண் பயணிகள் கூச்சலிடுதல், கண் அடித்தல், விசில் அடித்தல், சைகை உள்ளிட்டவற்றை செய்யக் கூடாது. என பல்வேறு அறிவுறுத்தல்கள் கண்டக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளிலும் மேற்கண்டவாறு திருத்தம் செய்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது

 #நல்லது தான்
ஆனா பெண்கள் ஆண்களை முறைத்தால் அதற்கு என்ன செய்யலாம் என ஒரு ஆண் பயணி கேட்கிறார்😂😂

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,