*மாதவிடாய் முதல் கருவுறுதல் வரை பெண்களின் உடல் நலம் பிரச்சனைகளுக்கு MIMO செயலி அறிமுகம்*
*மாதவிடாய் முதல் கருவுறுதல் வரை பெண்களின் உடல் நலம் பிரச்சனைகளுக்கு MIMO செயலி அறிமுகம்*

           சென்னை  கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் பெண்களுக்கான உடல் நலம் பிரச்சனை குறித்து செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலியை  மைன்ட் அண்ட் மாம் நிறுவனர். பத்மினி ஜானகி,ஆந்திரா மாநில சுகாதாரத் துறைச் செயலாளர் நவீன் குமார்,சரண்யா ஜெயக்குமார்,நிர்மலா ஐ.ஏ.எஸ், ஜானகி சபேஸ் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

              பல ஆளுமைகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.தமிழ்நாட்டில் முதல் முறையாக மைன்ட் அண்ட் மாம் என்ற நிறுவனம்  'MIMO' என்ற விர்ச்சுவல் சுகாதார உதவியாளரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாட்ஸ் ஆப்பில் அறிமுகம் செய்துள்ளது.

             இந்த செயலில் மூலம் கருத்தரிக்க முடியாத பெண்களுக்கு இலவசமாக ஆலோசனை வழங்கப்படும்.

              பெண்களுக்கு தேவையான தகவல்கள்,சந்தேகங்களை இந்த செயலி மூலமாக கேட்டு அறிய முடியும்.

      தமிழகத்திலுள்ள  நான்கு கோடி பெண்கள் பயன் பெறும வகையில் மைன்ட் அண்ட் மாம்  இந்த  முயற்சியை எடுத்துள்ளது.

 பெண்கள் மாதவிடாய் ஆரோக்கியத்தை கண்காணித்துக் கொள்ள பீரியட் ட்ராக்கரை வாட்ஸ் ஆப்-பில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது,.

‘+91 81486 57983’ என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில்  "Hi" என்று கூறி உங்கள் விர்ச்சுவல் சுகாதார பயிற்சியாளரின் உதவியை  24/7 பெறலாம்.

மாதவிடாய் முதல் கருவுறுதல் மற்றும் கர்ப்பம் வரை பெண்களின் அனைத்து உடல்நலப் பிரச்சனைகளுக்கும்  Mimo-ஆல்  உதவ முடியும் ,


பெண்களுக்கு மிகவும் விரைவாக   சுகாதார நினைவூட்டல்கள்,டிராக்கர்கள், உதவிக்குறிப்புகள் மற்றும் ஆலோசனைகள்,கால்குலேட்டர்கள்,  மற்றும் ஒட்டுமொத்த சுகாதார மதிப்பீட்டல் ஆகிய அனைத்தும் வாட்ஸ் ஆப்பில்  உதவக்கூடிய ஒன்றுபட்ட ஆரோக்கிய துணையாக மீமோ இருந்து விளங்கும் என கூறப்படுகிறது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,