PAN Card வைத்திருப்போர் கவனத்திற்கு –

 


PAN Card வைத்திருப்போர் கவனத்திற்கு – ஸ்மார்ட்போனில் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?



PAN Card வைத்திருப்போர் கவனத்திற்கு – ஸ்மார்ட்போனில் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?

ஆதார் கார்டு போல், பான்கார்டும் ஒரு முக்கியமான அரசு ஆவணமாக கருதப்படுகிறது. பான் கார்டு NSDL அல்லது UTIITSL ஆல் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்மார்ட்போனில் பான் கார்டை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகளை விரிவாகப் பார்ப்போம்.

எளிய வழிமுறைகள்:

இன்றைய காலகட்டத்தில் பான் கார்டு என்பது அத்தியாவசியமான ஆவணங்களில் ஒன்றாகும். மேலும் வங்கி கணக்கு தொடங்குவதற்கும், வங்கி பரிவர்த்தனைக்கும், வருமான வரி தாக்கல், அடையாள சான்று, வீடு நிலம் வாங்குதல், இப்படி முக்கிய பரிவர்த்தனைகளின் போது இன்றியமையாத ஆவணங்களில் ஒன்றாகவும் உள்ளது. பான் கார்டு குறித்து அறிந்தவர்கள் கூட அது வருமான வரி கணக்குத் தேவைகளுக்கு தான் என்று நினைத்துக் கொள்கின்றனர். வரி கட்டாதவர்கள் நமக்கு அது எதற்கு என்று அதைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் இது வருவான வரி செலுத்துவதற்கான எண் மட்டுமல்ல அல்லது வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு மட்டும் தேவையான விஷயமும் கிடையாது.


இந்திய குடிமகன் ஒவ்வொருவரது பண பரிவர்த்தனைகளும் பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும் இருக்க உதவுவது பான் கார்டு தான். இப்படி ஒரு முக்கியமான ஆவணத்தை ஆன்லைனில் ஈஸியாக விண்ணப்பித்து கொள்ளலாம். இதையடுத்து ஸ்மார்ட்போனில் கூட பான் கார்டை எளிமையாக பதிவிறக்கம் செய்ய முடியும். அதாவது PDF அல்லது XML வடிவத்தில் பான் கார்டை டவுன்லோடு செய்ய முடியும். நபர் ஒருவர் முக்கியமான இடத்தில் பான் கார்டை மறந்தால் கூட போனில் பதிவிறக்கம் செய்து வைத்த பான் கார்டு நகல் கண்டிப்பாகப் பயன்படும். குறிப்பாக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தான் பான் கார்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

வழிமுறைகள்:

  • முதலில் உங்களது ஸ்மார்ட்போனில் onlineservices.nsdl.com என்ற அரசாங்க இணையதளத்திற்கு செல்லவும்.
  • தற்போது நீங்கள் இரண்டு விருப்பங்களை பார்க்க முடியும். அதில் பான் எண் என்பதை தேர்வு செய்யவும்.
  • அடுத்து நீங்கள் உங்களது பான் எண்ணை உள்ளிட வேண்டும்.
  • அதன்பிறகு உங்களது ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
  • அதை தொடர்ந்து நீங்கள் பிறந்த தேதி உள்ளிட்டு, பின்னர் கேப்சாவை நிரப்பவும்.
  • இந்த இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் நீங்கள் பூர்த்தி செய்த பிறகு submit என்பதை கிளிக் செய்யவும்.
  • அதன்பிறகு ஒடிபி-ஐ பெற மின்னஞ்சல் அல்லது மொபைலில் ஒடிபி-ஐ உருவாக்குவதற்கான விருப்பத்தை தேர்வு செய்யவும்.
  • இப்போது உங்களுக்கு கிடைத்த ஒடிபி-ஐ உள்ளிட்டு சரிபார்க்கவும் என்பதை கிளிக் செய்தால் போதும். இப்போது உங்களது e-PAN கார்டை PDF அல்லது XML வடிவத்தில் திரையில் பார்க்க முடியும்.
  • இப்போது எளிமையாக பான் அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியும்.
thanks:https://tamil.examsdaily.in/

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,