திருநெல்வேலி மலர்ந்த தினம் செப்டம்பர் 01.


திருநெல்வேலி  மலர்ந்த தினம் செப்டம்பர் 01.


"திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' எனச் சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும். 1790 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி[5][6] திருநெல்வேலி மாவட்டம் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியால் உருவாக்கப்பட்டது. (அன்றைய தினத்தில் திருநெல்வேலி மாவட்டத்துடன் இன்றைய தூத்துக்குடி மாவட்டமும், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளும் இருந்தன.) செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி திருநெல்வேலி தினமாக கொண்டாடப்படுகிறது.


திரு=மதிப்பு 

நெல்=உணவு

வேலி=பாதுகாப்பு


திருநெல்வேலி பிரசித்தம் பெற்றது; ஏன் தெரியுமா?


10 சிறப்பம்சங்களை கொண்டது.

1) முதல் ஈரடுக்கு மேம்பாலம் பெற்ற *இந்திய நகரம்*

2) தமிழகத்தின் இரண்டாவது பெரிய சிவதலம் பெற்ற நகரம்.

3) தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய தேரை கொண்ட மாநகரம்.

4) நான்கு ரத வீதிகளில் இருந்து வளர ஆரம்பித்த நகரம்.

5) ஐந்து வகையான *நிலங்கள்* பெற்ற தமிழகத்தின் ஒரே மாவட்டத்தின் தலைநகரம்.

6) தமிழ்நாட்டின் ஆறாவது மிகப் பெரிய நகரம்.

7) சரிகமபதநிச என்ற ஏழு ஸ்வரங்கள் பாடும் இசைத்தூண்களை கொண்ட ஒரே நகரம்.

80தினசரி எட்டு லட்சம் மக்களால் இயங்கிக் கொண்டிருக்கும் பெருநகரம்.

9) ஒன்பது கி.மீ சுற்றளவு கொண்ட மாநகரம்.

10) தமிழகத்திலேயே அதிகமாக பத்து அணைகளை கொண்ட செழிப்பான மாவட்டம்.


*தென்பாண்டி சீமை* என்றும் அழைக்கப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பிற தென் தமிழக மாவட்டங்களிலும் பேசப்படும் வட்டார வழக்கு மொழி திருநெல்வேலித் தமிழ் ஆகும். இவ்வழக்கு மொழியை 

நெல்லைத்தமிழ் என்றும் அழைப்பர்.


தமிழ் மொழி *பொதிகை* மலையில் பிறந்தது என்பது ஒரு நம்பிக்கை. அந்தப் பொதிகை மலைத்தமிழே நெல்லைத் தமிழாகும். எனவே *நெல்லைத்தமிழ்* தமிழின் துவக்கநிலை மற்றும் தூய வடிவம் என்று சிலரால் கருதப்படுகிறது. 


பெரியோரை *அண்ணாச்சி* என்று அழைக்கும் நெல்லைத் தமிழ் வேறு எந்தத் தமிழ் வட்டார வழக்கிலும் இல்லை.


இது தற்போதைய திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் திருநெல்வேலி வட்டார வழக்குத் தமிழ் பயன்பாட்டிலுள்ளது. 


'கிறு', 'கின்று', 'நின்று', ஆநின்று போன்ற துணை வினைச் சொற்களைப் பழந்தமிழில் காண்பதரிது. திருநெல்வேலி வழக்குத்தமிழில் அவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி