உலகத் தற்கொலை தடுப்பு நாள்: செப்டம்பர் 10

 


உலகத் தற்கொலை தடுப்பு நாள்: செப்டம்பர் 10

🥲
நாளிதழ்களில் தற்கொலைச் செய்திகள் இல்லாத நாட்களே இல்லை என்னும் அளவுக்குத் தற்கொலை செய்துகொள்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது. தனிமை, புறக்கணிப்பு, பயம், கவலை, வறுமை, குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, விரக்தி போன்றவையே தற்கொலை செய்துகொள்வதற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன.
உலகில் உள்ள உயிரினங்களில் மனிதன் மட்டும்தான் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறான். மற்ற உயிரினங்கள் அனைத்தும் தமக்கு ஏற்படும் இடர்பாடுகளைக் கடந்து, போராடி வெற்றிபெற முயல்கின்றன. இதனால்தான் தற்கொலை செய்துகொள்வது சட்டத்துக்குப் புறம்பான விஷயமாகக் கருதப்படுகிறது.
தற்கொலையைத் தடுக்கும்விதமாக 2003 முதல் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 10-ம் தேதி உலகத் தற்கொலைத் தடுப்பு தினமாகக் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
அடிசினல் சேதி : எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எல்லாம் பதிவிட்டு மற்ற இளைஞர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வந்த தூரிகை கபிலன் நேற்று தற்கொலை செய்து கொண்டார்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி