குறைந்த பட்சம் ரூ.33 லட்சம் கிடைக்கும் போர்டு நிறுவன ஊழியர்களுக்கு செட்டில்மென்ட்*

:


*குறைந்த பட்சம் ரூ.33 லட்சம் கிடைக்கும் போர்டு நிறுவன ஊழியர்களுக்கு செட்டில்மென்ட்*


சென்னை: போர்டு நிறுவனம் தனது சென்னை ஆலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு செட்டில்மென்ட்டை அறிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த போர்டு கார் நிறுவனம் சென்னை மறைமலை நகரில் கார் உற்பத்தி தொழிற்சாலையை நிறுவி, 1998ம் ஆண்டு உற்பத்தியை துவங்கியது. இதுபோல் குஜராத்திலும் ஒரு தொழிற்சாலை நிறுவப்பட்டது. இந்த 2 தொழிற்சாலைகளிலும் உற்பத்தியை நிறுத்துவது எனவும், ஏற்றுமதி செய்யப்ப்போவதில்லை எனவும் இந்த நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி அறிவித்தது. இந்தியாவுக்கு ஏற்ப குறைந்த தயாரிப்பு செலவில் கார்களை உருவாக்க முடியாததால் லாபம் கிடைக்கவில்லை எனவும், இதனால் உற்பத்தி நிறுத்த முடிவுக்கு வந்ததாகவும் போர்டு அறிவித்தது. நிறுவனத்தின் இந்த முடிவால் தொழிலாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.  இந்த நிறுவனம்கடந்த ஜூலை 20ம் தேதி கடைசி காரை உற்பத்தி செய்தது. அத்துடன் உற்பத்தி நிறத்தப்பட்டது.


இந்நிலையில், ஊழியர்கள் நிறுவனத்துக்கு எதிராக அவ்வப்போது போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த நிறுவனம் ஊழியர்களுக்கு செட்டில்மென்ட் அறிவிப்பை நேற்று வெளியிட்டது. அதன்படி, ஊழியர்கள் பணி நிறைவு செய்த ஆண்டுக்கு ஏற்பட, ஒரு ஆண்டுக்கு 130 நாட்கள் வீதம் கணக்கிட்டு செட்டில்மென்ட் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு இந்த நிறுவனம் ஆண்டுக்கு 115 நாட்கள் வீதமும், பின்னர் 124 நாட்கள் வீதமும் கணக்கிட்டு வழங்குவதாக தெரிவித்திருந்தது. தற்போது இது 130 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


இந்த புதிய திட்டம் நேற்று துவங்கியுள்ளது. வரும் 23ம் தேதி வரை அமலில் இருக்கும். இதற்கு ஒப்புக்கொண்டு செட்டில்மென்ட் திட்டத்தை ஏற்கும் ஊழியர்களுக்கு, இந்த மாதம் 30ம் தேதி வரை சம்பளம் வழங்கப்படும். இந்த புதிய செட்டில்மென்ட் திட்டப்படி, ஒரு ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.33 லட்சமும், அதிகபட்சம் ரூ.85 லட்சம் வரையிலும் கிடைக்கும் என நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


...

 *


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி