சைபர் கிரைம் மோசடியில் 175 கோடி ரூபாய்

 


கடந்த ஒன்றரை ஆண்டில் பொதுமக்கள் சைபர் கிரைம் மோசடியில் 175 கோடி ரூபாய் இழந்துள்ளனர் என சைபர் க்ரைம் எஸ்.பி ஸ்டாலின் பகீர் தகவல் வெளியிட்டுள்ளார்.

சென்னையில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய சைபர் க்ரைம் எஸ்.பி ஸ்டாலின், "இணையவழி குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தாண்டு செப்டம்பர் 18-ம் தேதி வரை 62,767 சைபர் க்ரைம் புகார்கள் வந்துள்ளன. இந்த மோசடியில் ஈடுபட்டதாக 486 குற்றவாளிகளை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் பொதுமக்கள் சைபர் மோசடியில் சிக்கி 175 கோடியே 19 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் இழந்துள்ளனர். அதில் 33.45 கோடி ரூபாய் பணம் முடக்கப்பட்டு 9.8 கோடி ரூபாய் மீட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 30% பேர் பைனான்ஸ் ஸ்கேம் மூலம் பணத்தை இழந்துள்ளதாக புகார் அளித்துள்ளனர். இணையவழி மோசடியில் பணத்தை இழந்தோர் உடனடியாக 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ளலாம். உடனே இழந்த பணம் மீட்டு தரப்படும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,