*திருப்தி என்னும் செல்வம்*
*திருப்தி என்னும் செல்வம்*
நன்றி குங்குமம் ஆன்மிகம்
‘திருப்தி’ என்ற குணத்தையே ‘சந்தோஷம்’ என்றும் கூறலாம். இது மனதோடு சம்பந்தப்பட்ட குணம். எப்போதும் சந்தோஷமாக இருப்பதென்பது லட்சுமீகரமான குணமாகக் கருதப்படுகிறது. இந்த குணம் இல்லாதவரே உண்மையில் வறியவர். மன நிறைவு உள்ளவரே செல்வந்தர். இன்னொரு விதமாகப் பார்த்தால் ‘திருப்தியடைவது வளர்ச்சிக்குத் தடை. அதிருப்தியே நம்மை முன்னோக்கித் தள்ளி நிறைய சாதனைகளைச் சாதிக்கச் செய்யும். சிறிதளவு வெற்றி பெற்ற உடனேயே திருப்தியடைந்து விட்டால் வளர்ச்சி நின்று விடும்.’ இந்த கூற்றையும் ஒதுக்கி விட முடியாது.
இந்த இரண்டு வித கருத்துகளையும், ஒற்றுமைபடுத்தி நடத்துவதே வாழ்க்கை. கிடைத்த ஆனந்தத்தை உணருவது திருப்தி. அந்த திருப்தியோடு கடமையில் நிஷ்டையாக முன்னேற வேண்டும். முன்னேற்றி நடத்துவிக்கும் சக்தி ‘அதிருப்தி’ யாகவே இருக்க வேண்டுமென்பதில்லை. தர்ம நிஷ்டையே நம்மை முன்னேற்றப் பாதையில் நடத்துவிக்க வேண்டும். திருப்தியை சகஜமாக ஆக்கிக் கொண்டால், கட்டுப்பாடில்லாத ஆசைகளை அடக்கி, ஆனந்தமடைய முடியும். ஆசையை அடக்கும் முறை தர்மம்.
தர்மத்தைக் கடைப்பிடிப்பதற்கு எது தேவையோ அதனை பெற விரும்புவது என்ற எல்லையை விதித்துக் கொள்ளும் போது, நமக்கும் நலம். சமுதாயத்திற்கும் நலம். எல்லையில்லாத ஆசையோடும் சதா அதிருப்தியோடு வயிற்றெரிச்சலோடு இருப்பவன் மற்றவர்களின் செல்வத்தையும் அபிவிருத்தியையும் பார்த்து அசூயைபடுவான். பகையை வளர்த்துக் கொள்வான். அவகாசத்தை ஏற்படுத்திக் கொள்வான். படையெடுப்பான். ஆக்ரமிப்பான். திருடுவான். அன்புணர்ச்சியை இழப்பான். எப்போதும் மற்றவரை சந்தேக கண்ணோட்டத்தோடு பார்ப்பான். முகத்தில் பிரசன்னம் பெயருக்குக் கூட தென்படாது. திருப்தியின்மையால் ஏற்படும் விபரீதமான, ஆபத்தான பரிணாமங்கள் இவை.
ஹரி, வாமனராக அவதரித்து பலிச் சக்ரவர்த்தியிடம் வந்து போது, இந்த ‘திருப்தி’ பற்றிய அழகான உரையாடல் நிகழ்ந்தது. மூவுலகங்களின் செல்வங்களையும் தனதாக்கிக் கொண்ட உயர்ந்த செல்வந்தன் பலிசக்ரவர்த்தி. அப்படிப்பட்டவனிடம் சென்று வெறும் மூன்றடி மண் கேட்டார் வாமனர். (அப்படிக் கேட்டு வாங்கி கடைசியில் மூவுலகங்களையும் ஆக்ரமித்தார்.
அது அடுத்த கட்டம். அதிலும் மர்மம் உள்ளது). ‘‘ரத்தினக்குவியலோ, சதுரங்க பலமோ, மாளிகைகளோ, நகரங்களோ... கோராமல், வெறும் மூவடி நிலம் கேட்கிறாயே! இப்படிப்பட்ட சக்ரவர்த்தியிடம் வந்து இது மட்டுமா கேட்பது? எனக்கே அவமானமாக உள்ளது. வேறு ஏதாவது கேள்!’’ என்றான் பலிசக்ரவர்த்தி.
‘‘ராஜா! உன்னிடம் என்ன உள்ளதென்று அறிந்து அதைக் கேட்பதல்ல என் கடமை. எனக்கு எது தேவையோ, எது என் தர்மத்திற்கு உதவிகரமோ அதனை மட்டுமே நான் கேட்க வேண்டும். உன் ராஜ்யங்கள், நகரங்கள், சதுரங்கப் படைகள், ரத்தினங்கள்… இவற்றைக் கொண்டு நான் என்ன செய்வது? நான் வடு. பிரம்மசாரி. அனுஷ்டானமும் அத்யயனமும் என் சுய தர்மங்கள். குடையோ, பூணூலோ, கமண்டலமோ…. இப்படிப்பட்டவையே என் தர்மத்திற்கு உதவுபவை. அதே போல், என் அனுஷ்டானத்திற்குத் தேவையானது நிலம். இவையன்றி, மீதி எதுவும் எனக்கு அநாவசியம். நான் கேட்டதைக் கொடுத்தால் அதுவே மூவுலகங்களையும் கொடுத்தாற் போல’ என்று வாமனர் பதிலளித்தார்.
இதில் அனேக மர்மங்கள் உள்ளன.‘சுய தர்மத்திற்கு இழுக்கு ஏற்படுத்தாத செல்வம், போகம் மட்டுமே கோரக் கூடியவை. மேலும், அச்செல்வம் தர்மத்தைக் கடைபிடிப்பதற்கு இன்னும் சிறப்பாக உதவ வேண்டும். அன்றி, சுயதர்மத்தை அழிக்கும் போகத்தை விரும்பக்கூடாது.’ என்ற கருத்து ஒன்று.‘அடுத்தவரிடம் உள்ளது என்னிடம் இல்லையே!’ என்று ஒப்பிட்டுப் பார்த்து செல்வத்தின் தேவையை நிர்ணயிக்கக் கூடாது. சக்ரவர்த்திக்குத் தேவையானவை. அத்யயனம் செய்யும் மாணவனுக்கு அனாவசியம். தனக்குத் தேவையானவற்றை மட்டும் பரிசீலித்து சம்பாதித்துக் கொள்ள வேண்டுமே தவிர, மற்றவரோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தவறு. என்ற உபதேசம் கூட மறைந்துள்ளது.
‘சாலு நண்டெ இன்சு கந்தெ சாலுனு ஜன்மமுனகு
:
Comments