இளவரசர் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராகியிருக்கிறார்
ராணியின் மறைவுக்குப் பிறகு அவருடைய மகன் இளவரசர் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராகியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, அவருடைய மனைவி கமிலா ராணியானார்.
பலவிதமான வைரங்கள் இருந்தாலும், கோஹினூர் வைரம்தான் உலகின் மதிப்புமிக்க வைரமாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில், ராணியின் மறைவுக்குப் பிறகு, அவரின் கோஹினூர் வைரம் பொருந்திய கிரீடம் யாருக்குச் செல்லப்போகிறது என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்திருக்கிறது. இங்கிலாந்து ராணியின் கிரீடம் மிகவும் புகழ்பெற்றது.
1849-ம் ஆண்டு ராணி விக்டோரியாவிடம் இது ஒப்படைக்கப்பட்டது. தற்போது இந்த கிரீடம் லண்டன் டவரில் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதைத் தொடர்ந்து, உலகப் புகழ்பெற்ற வைரமாகக் கருதப்படும் கோஹினூர் வைரம் பொருந்திய கிரீடம் கமிலாவிடம் செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
நன்றி: விகடன்
Comments