எழுத்தாளர் சூடாமணி

 


எழுத்தாளர் சூடாமணி காலமான நாளின்று

😢
கிட்டதட்ட 8 நாவல்கள், 18 குறுநாவல்கள், 575 சிறுகதைகளை எழுதி இருக்கிறார். ஆங்கிலத்தில் 250 சிறுகதைகள் எழுதி இருக்கிறார்.
இவரது கதைகள் படிப்பவர் மனதை பண்படுத்துபவை. வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் நல்ல முறையில் புரிந்து கொள்ள வைப்பவை. வாழ்க்கையின் வேறு கோணத்தை இவரது கதைகள் அறிமுகப்படுத்தும். இந்த ரசவாதங்களை சூடாமணியின் கதைகள் செய்யும்.
படிப்பவர் மனதை கொஞ்சம் உழுது விட்டுப் போகும். இவரது நூல்கள் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கின்றன.
இவரது பல கதைகளுக்கு ‘இலக்கியச் சிந்தனை விருது’ மற்றும் பல விருதுகளும் கிடைத்திருக்கின்றன
எழுத்தாற்றல் மற்றுமின்றி, மனத்திண்மை, தீர்க்கதரிசனம், பெருநோக்கு, சேவை போன்ற அரிய பல பண்புகள் கொண்ட இவர் தமது காலத்திற்குப் பின்னர் தமது சொத்துக்களின் கிரய மதிப்பை (இவரது வீடு விற்று வந்த தொகை, 2011 ஆம் ஆண்டு ஒரு கோடியே ஐம்பது லட்சமும், 2012 ஆம் ஆண்டில் இரண்டு கோடியே பத்து லட்சம் ரூபாயும் ஆகும்) ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மூன்று நிறுவனங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்திருந்தார்.
சூடாமணி தானமளித்த தொகை மாணவர்களின் கல்விக்கும், தொழுநோயாளிகளின் சிகிச்சைக்காகவும் நவீன வசதிகள் கொண்ட அறுவை சிகிச்சை அறையாக நோயாளிகளுக்கும் பயன்படுகின்றது. நாட்டிலேயே தன் சொத்து அனைத்தையும் சேவை நிறுவனங்களுக்கு சேர உயில் எழுதி வைத்த ஒரே எழுத்தாளர் சூடாமணிதான்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,