ராணி எலிசபெத் மறைவு குறித்து கமல்ஹாசன்

 


ராணி எலிசபெத் மறைவு குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், "உலக அரசியல் மாறிவிட்டது என்பதை உணர்ந்த உலக தலைவர் ஒருவர் அவர். காலனி மனப்பான்மையிலிருந்து மாறிவிட்ட இங்கிலாந்தின் ஒரு பிரதிநிதியாகவும் அவர் இந்தியாவுக்கு வந்திருந்தார். நாங்கள் மாறியிருக்கிறோம். கிட்டத்தட்ட பழையதை மறப்போம் புதிய உலகை படைப்போம் என்ற எண்ணத்தில் தான் வந்திருந்தார்கள். மருதநாயகம் அவர்களை காலனி ஆட்சி வருவதற்கும் முன்னாள் தூக்கில் இடப்பட்ட அதே தேதியில் இங்கு வந்தார். நாங்கள் பேசிய வசனங்கள் எல்லாம் காலனி ஆட்சிக்கு எதிரான வசனங்கள்.

நாங்கள் இது தான் பேச போகிறோம் என்று தெரிந்தும் அவர் அங்கு வந்து அமர்ந்திருந்தார். அது அவருடைய மனப்பாங்கையும் அரசியல் மாறிவிட்டது உலகம் மாறிவிட்டது என்பதை உணர்ந்த ஒரு அரசியாக வராமல் ஒரு தாயாக வந்திருந்தார். அது எனக்கு பிடித்திருந்தது. பின்பு நானும் அங்கு சென்று பக்கிங்காம் மாளிகையில் அவரை சந்தித்தேன். புதிய உலகை அனுபவித்து முழுமையான வாழ்க்கையும் நீண்ட நாட்கள் அரியணையில் வாழ்ந்த உலகத் தலைவர்களில் ஒருவர், வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர் பார்க்காத உலக சரித்திரம் ஒன்றுமில்லை என்று சொல்லுமளவிற்கு அனைத்து மாற்றத்தையும் பார்த்து அனுபவித்து அதற்கான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் சொல்லி மறைந்திருக்கிறார். இங்கிலாந்து மக்களுக்கு அனுதாபங்கள்." என பேசியுள்ளார்.
நன்றி: நக்கீரன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,