"என்னால் இதுபோல் நடிக்கமுடியாது ஜி...இந்த முயற்சியைக் கைவிட்டுவிடுங்கள்"...
"
என்னால் இதுபோல் நடிக்கமுடியாது ஜி...இந்த முயற்சியைக் கைவிட்டுவிடுங்கள்"...
இந்திநடிகர் திலிப்குமார் திரு நாகிரெட்டியிடம் கூறியது... விஷயம் என்னவெனில் திரு ரெட்டிக்கு "எங்க வீட்டுப்பிள்ளை" படத்தை இந்தியில் திலீப்குமாரை நடிக்கவைத்து தயாரிக்க விருப்பம். தலைவருக்கும் இதில் சம்மதம். ரெட்டி அப்படத்தை போட்டுக்காண்பித்தார். உடன் மக்கள்திலகமும் இருந்தார். படம் முழுவதையும் பார்த்துவிட்டு திலீப் சொன்னதாவது....
"எம்ஜிஆர் அளவிற்கு இந்த படத்தில் என்னால் நடிக்கமுடியாது. முக்கியமாக 'நான் ஆணையிட்டால்' பாடல் காட்சியில் எம்ஜிஆர் சாட்டையை சுழற்றியபடி வேலைக்காரர்கள் ஆரவாரம் சூழ ஆடிப்பாடி நடிப்பது எனக்கு சிறிது கஷ்டமான விஷயமே. அந்த ஷாட்ல அந்த வேலைக்காரர்களுக்கும் எம்ஜிஆர் க்கும் இடையில் என்ன ஒரு அன்னியோன்னியம், உற்சாகம். அவர்போல என்னால் அப்படி நெருங்கி நடிக்கமுடியாது. எங்கள் (இந்தி) படங்களில் நாங்கள் வீட்டு வேலைக்காரர்களை இப்படிக் காண்பிக்கமாட்டோம். எங்க மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஏனெனில் வேலைசெய்யறவங்க கிட்ட Distance keep up பண்ணுவோம்"...
இதற்கு மக்கள்திலகம் கூறியதாவது... " நான் கஷ்டப்பட்ட போது அதை என்னுடன் பங்கு கொண்டது இவர்கள் போன்ற தொழிலாள சகோதரர்கள் தான். இவர்களின் கஷ்டநஷ்டங்களை நான் நன்கு அறிவேன். இவர்களின் மேல் நான் வைத்திருக்கும் பாசத்தையும் நன்றியையும் வெளிப்படுத்த நான் தான் இக்காட்சியை படத்தில் சேர்க்கச்சொன்னேன். உங்களுக்கு தேவையில்லையெனில் வேறு மாதிரி அமைத்துக்கொள்ளுங்கள் " ... இதைக்கேட்ட திலீப்குமார் மெய்சிலிர்த்துவிட்டார்.
இது தான் மக்கள்திலகம். தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தொழிலாளர்களின் மீதான தன் பாசத்தையும் நன்றியையும் தனது படங்களில் காட்சிகளை வைக்கத் தவறியதே இல்லை.
"மாண்பு என்பதற்கு பொருளே மக்கள்திலகம் தான்" என அடியேன் சொல்லித்தெரியவேண்டுமோ...???
ரவிக்குமார் முகநூல் பதிவு
Comments