சாண்டிலயன் நினைவு நாளின்று

 


சாண்டிலயன் நினைவு நாளின்று

🥲
சரித்திர நாவல்களின் ஜாம்பவானாகத் திகழ்ந்தவர் எழுத்தாளர் சாண்டில்யன். இன்றும் கூட அவரை சிலாகிக்காதவர்களே இல்லை. அவரது நாவல்கள் இன்றும் ஹாட் சேல்தான். கல்கியின்‘பொன்னியின் செல்வனை’ பேசுபவர்கள் சாண்டில்யனின் ‘கடல்புறா’வையும், ‘கன்னி மாட’த்தையும், ‘யவன ராணி’யையும் பேசிவிட்டே நகர்வார்கள்.அந்தளவுக்கு பிரம்மாண்டத்தை நாவல்களில் காட்டியவர். அவரின் சரித்திர நாவல்கள் ஒவ்வொன்றும் மாஸ்டர்பீஸ் ரகம். சுமார் ஐம்பது வரலாற்றுப் புதினங்களைத் தமிழ் வாசகர்களுக்கு அள்ளித் தந்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல; சமூக நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எனப் பல தளங்களிலும் முத்திரை பதித்தவர்..
அதை எல்லாம் விட ஜர்னலிஸ்ட்டுக்கு யூனியன் வேண்டும் என சென்னை ஜர்னலிஸ்ட் அசோசியேஷனை ஆரம்பித்தவர் சாண்டில்யனே ஆகும். ரிச்சி தெருவில் அந்த சங்கத்திற்கான கட்டடம் கட்ட முதல்முதலாக பணம் வசூல் செய்ய ஏற்பாடு செய்தார்
சாண்டில்யன் சினிமாவில் எடிட்டிங்கில் இருந்து பல விஷயங்கள் கற்றிருந்ததால, ‘பர்த் ஆஃப் ஏ நியூஸ் பேப்பர்’னு பத்திரிகை உற்பத்தி பற்றி ஒரு ஆவணப்படம் தயாரிச்சார். இந்தியாவிலேயே பத்திரிகை உற்பத்தி பற்றி தயாரிக்கப்பட்ட முதல் செய்திப்படம் அதுதான்.

இந்த சாண்டில்யன் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் ‘குமுதம்’ வார இதழின் விற்பனையில் தேக்கம் வந்தால் சாண்டில்யன் தொடரை அறிவித்து, அதன் விற்பனையை அதிகரிக்கச் செய்வார்கள் என்று சொல்வார்கள். அப்படி பலரால் புகழப்பட்ட சாண்டில்யன் மறைந்த நாள் இன்று.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,