நெப்போலியன்
நெப்போலியன்
அமெரிக்காவிற்கு சென்றவர் அதன்பின் பெரிதாக தமிழ்நாடு பக்கமே வரவில்லை. கிட்டத்தட்ட கடந்த 7 வருடங்களாக அவர் அரசியலில் இருந்தே ஒதுங்கி இருக்கிறார். இந்த நிலையில் அதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு பின் பேசிய அவர், எனக்கு சினிமா வாய்ப்பு அடிக்கடி வருகிறது. வருடத்திற்கு 10 படங்களில் நடிக்க கேட்கிறார்கள். அதற்கு நேரம் இல்லை. அதனால் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்கிறேன். மற்றபடி இந்தியா வருவது இல்லை.
எனக்கு விவசாயம் மீதுதான் ஆர்வம், நான் பிறந்து வளர்ந்தது விவசாய குடும்பம். தற்போது அமெரிக்காவில் விவசாயம் செய்கிறேன். இதற்காக 300 ஏக்கர்ல நிலம் வாங்கினேன்.இதில் புற்கள் விவசாயம் செய்கிறோம். இதை விளைய வைத்து விற்பனை செய்கிறோம். எல்லாம் மிஷின் மூலம் வெட்டி அதை விற்பனை செய்கிறோம். தமிழ்நாட்டில் எப்படி அரிசி விற்பனைக்கு விளையவிக்கப்படுகிறதோ அப்படித்தான் இங்கே புற்களை விளைய வைத்துக்கொண்டு இருக்கிறோம்.
12 வருடமாக அமெரிக்காவில்தான் இருக்கிறேன். விவசாயம் செய்யவே எனக்கு விருப்பமாக உள்ளது. இங்கே தோட்டம் போட்டு இருக்கிறோம். அதில் விளையும் காய் கறிகளைத்தான் சாப்பிடுகிறோம். இயற்கையான உணவுகளை சாப்பிடுகிறோம். தோட்டத்தை பார்த்துக்கொள்வது, குடும்பத்தோடு இருப்பது என்று சந்தோசமாக இருக்கிறேன். எனக்கு அரசியலில் மேலும் விருப்பம் இல்லை. நான் இப்போது அரசியலிலேயே இல்லை.
7 வருடமாக அரசியலில் இல்லை. நான் இனி அரசியல் பக்கமே எட்டி பார்க்க மாட்டேன். எனக்கு எப்போதும் அரசியல் குரு கலைஞர்தான். மற்றபடி அரசியலில் எட்டிப்பார்க்கும் எண்ணம் இல்லை. நான் எம்பியாக, எம்எல்ஏவாக, அமைச்சராக இருந்துவிட்டேன். அவ்வளவுதான். என் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. குழந்தையை பார்த்துக்கொள்ள, சிகிச்சை அளிக்க இங்கே வந்துள்ளேன். அதனால் அரசியலில் இனி இருக்க மாட்டேன், என்று நெப்போலியன் தெரிவித்துள்ளார்.
நன்றி; ஒன்இந்தியா தமிழ்
Comments