*கொள்ளுப் பருப்பின் மருத்துவக் குணங்கள் !!*

 


*கொள்ளுப் பருப்பின் மருத்துவக் குணங்கள் !!*


கொள்ளுப் பருப்பில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது. இதை ஊற வைத்து சாப்பிடலாம் அல்லது வறுத்தும் சாப்பிடலாம். ஜலதோஷம் குணமாக கொள்ளுப் பருப்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த வேண்டும். மேலும், இது உடல் உறுப்புகளைப் பலப்படுத்தும். இதை அருந்துவதால் வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், கண் நோய்கள் போன்றவையும் குணமாகும்.


👉 கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச்சதையை குறைக்கும் சக்தி கொள்ளுப் பருப்பிற்கு உண்டு. கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.


👉 அடிக்கடி உணவில் கொள்ளு சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். இரவில் ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம்.


👉 கொள்ளுப் பருப்பு உடலில் இருக்கும் ஊளைச்சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவையும் கொடுக்கக் கூடியது. எனவே கொள்ளுப் பருப்பை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.


👉 கொள்ளு சூப் சளியைப் போக்கும் குணம் வாய்ந்தது. எனவே குழந்தைகளுக்கு சளி பிடித்தால், கொள்ளு சூப் வைத்துக் கொடுக்கலாம். இதை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாம்.


👉 கொள்ளுப் பருப்பை ஆட்டி பால் எடுத்து அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளுப் பருப்பை அரைத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு, நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளுப் பொடியை போட்டால் அருமையான சுவையுடன் ரசம் இருக்கும்.


👉 இது பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மாதாந்திர ஒழுங்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும்.


👉 மேலும் கொள்ளும் அரிசியும், கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும். எனவே பெண்கள் இதை உணவாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,