ஹிந்திப் பாடல்களுக்கு எப்படி ரஃபியோ அதுபோல தமிழ்ப் பாடல்களுக்கு பிபிஎஸ்

 


ஹிந்திப் பாடல்களுக்கு எப்படி ரஃபியோ அதுபோல தமிழ்ப் பாடல்களுக்கு பிபிஎஸ் என அவருடைய ரசிகர்கள் எப்போதும் மெச்சும் வண்ணம் பாடல்களை அளித்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் அவருடைய குரலில் ஒரு ஸ்டைல், நவநாகரிகத்தன்மை இருக்கும். பாடிய முறையில் தனித்துவம் வெளிப்படும். மனிதன் என்பவன் தெய்வமாகலாம், நிலவே என்னிடம் நெருங்காதே, மயக்கமா கலக்கமா, காலங்களில் அவள் வசந்தம், ரோஜா மலரே ராஜகுமாரி, பாடாத பாட்டெல்லாம், வளர்ந்த கலை என பிபிஎஸ் பாடிய பாடல்களை இன்றைய தலைமுறையினர் கேட்டால் நிச்சயம் அதைப் புதிய பாடல்களைப் போல தொடர்ந்து கேட்பார்கள் என்று நிச்சயமாகச் சொல்லலாம். அதுதான் பிபிஎஸ் குரல் செய்யும் மாயம்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, வங்காளி, மராத்தி, கொங்கணி உள்ளிட்ட 12 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார் பிபிஎஸ். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ், காந்தாராவ், ராஜ்குமார் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களுக்குப் பின்னணிக் குரல் பாடியுள்ளார். சிறந்த பாடகராக விளங்கிய பி.பி.எஸ். கவிதைகள் எழுதுவதிலும் தேர்ந்தவராக இருந்தார்.
2010-ல் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பாடிய பெண்மானே.... பாடலும் தமிழ் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்ற பி.பி.எஸ். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். 82 வயதில், 2013-ம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று மறைந்தார்.
தமிழில் ஜெமினி கணேசனின் குரலாக இருந்த பிபிஎஸ், கன்னடத் திரையுலகில் ராஜ்குமாருக்காக 300 பாடல்களுக்கும் அதிகமாகப் பாடியுள்ளார். திரையுலகில் என்னுடைய அடையாளமாக பிபிஎஸ்-சின் குரல் இருந்துள்ளது என்று ராஜ்குமார் கூறியுள்ளார். 1995-ல் ராஜ்குமாருக்கு பால்கே விருது கிடைத்தபோது தன்னுடைய குரலுக்கு அங்கீகாரம் கிடைத்ததாக மகிழ்ந்தார் பிபிஎஸ்.
நன்றி: தினமணி

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி