எங்கப்பாவ கோர்ட்டுல பொய் சொல்ல சொன்னாங்க.
எங்கப்பாவ கோர்ட்டுல பொய் சொல்ல சொன்னாங்க.. ஆனா" - நடிகை ராதிகா
தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் நடிகை ராதிகா ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் தனது தந்தை பற்றி யாருக்கும் தெரியாத ரகசியம் ஒன்றை கூறியுள்ளார். அவர் "எங்கள் குடும்பத்தின் ராக்ஸ்டார் என் தந்தை தான். தான் சமீபத்தில் எங்கள் அப்பாவின் வழக்கறிஞர் ஒருவர் எழுதிய அறிக்கையை படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு காரியம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. வழக்கறிஞர்கள் சிலர் என் அப்பாவிடம் நீங்கள் ரிலீஸாவதற்கு ஒரு பொய்யை(white lie ) சொல்ல வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள், உடனே என் தந்தை 'நான் வாழ்நாள் முழுவதும் செய்யாத ஒன்றை, இப்போது ஏன் செய்யச் சொல்கிறீர்கள். என்ன நடக்குதோ நடக்கட்டும்" என்று கூறியுள்ளார். வாழ்க்கை முழுவதும் சிறந்த நெறிகளோடு வாழ்ந்தவர் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டாம்" என்று அந்த பதிவில் கூறியுள்ளார்
Comments