தாயே அன்பு தாயே நீயே/ கவிவேந்தர் மு.மேத்தா






தாயே அன்பு தாயே நீயே 


  தெய்வம்  நீயே என்றும் உந்தன் வாசமே எங்கள் சுவாசமே தாயின் பாதங்களில் சொர்கம் காத்திருக்கும் கோவில் கோவிலாக சென்று மனிதன் தேடுகிறான் தேவன் நோகிறான் திரும்பி போகிறான்  வானம் வெகு தூரமில்லை வாழ்க்கை ஒரு பாரமில்லை வாழும் வரை வாழ்ந்து அன்பை வாழ வைக்கலாம் தாயொருத்தி நீ இருக்க தங்கம் பெத்த மனசிருக்க சேவை உண்டு தேவை இல்லை எங்கள் வீட்டிலே கை கொடுக்கும் கைகள் தம்மை கை குவித்து வணங்கி செல்வோம் மானுடத்தின் மகத்துவத்தை சொல்வோம் உன்னை பற்றி நானே என்ன சொல்வது சொல் என் தாயே காலம் முழுதும் வாழ்க்கை முழுதும் கண்ணில் உன்னை காத்திருப்பேன்  அன்பு கொண்ட இதயம் உண்டு ஆதரிக்கும் கைகள் உண்டு வாழ்க்கை நம்மை தேடி வந்து வாழ்த்தி செல்லுமே தோளை தொட்டிலாக்கி என்னை தூங்க வைத்த ராகம் நீயே காலை ஊஞ்சலாக்கி என்னை ஆட வைத்தவள் பத்து மாதம் உன் வயிற்றில் பத்திரமாய் நான் இருந்தேன் சித்திரம் போல் நீ வளர்த்தாய் என்னை உன்னை பற்றி நானே என்ன சொல்வது சொல் என் தாயே காலம் முழுதும் வாழ்க்கை முழுதும் கண்ணில் உன்னைகாத்திருப்பேன்

 கவிவேந்தர் மு.மேத்தா






video link





Voice Sathiyaprakash Tabala Saravanan, Venkatrao Veenai Anjani Flute Sashikumar Backing Vocals Reshmi,Vyjeyanthi,Poornima,Sabitha Keyboard Programming Deva Music Arrengments and conducting A.Dakshinamoorthy Recording Engineer Mithun Mixing And Mastering T.Marcus Kirubakaran Producer T.Victor Selvam Familly Music Udayan Victor COPY RIGHT CUCKOO SOUNDS


Udayan Victor

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,