ராமராஜன் ரீ எண்ட்ரீ
மக்கள் நாயகன் என்ற அடைமொழியுடன் உலா வந்த ராமராஜன் ரீ எண்ட்ரீ ஆகும் படத்தின் டீசர் ரிலீஸ் இன்னிக்கு இருக்குது~!
தமிழ் சினிமா உலகில் 90 கால கட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழந்தவர் நடிகர் ராமராஜன். ரஜினி, கமல் என்று ஸ்டைலான நடிகர்கள் இருந்த நிலையில் வெறும் அரை ட்ரவுசர் மட்டுமே போட்டு வந்து தன் படத்தை 100 நாட்களுக்கு மேல் ஓடவைத்தவர். இந்த பெருமையெல்லாம் ராமராஜனை மட்டுமே சேரும்.
1986ம் ஆண்டு நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானவர் ராமராஜன். கிராமிய கதைகளாக நடித்து வந்த ராமராஜனுக்கு கங்கை அமரன் இயக்கத்தில் நடித்த கரகாட்டக்காரன் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. அப்படம் வருட கணக்கில் தியேட்டர்களில் ஓடியது. தொடர்ந்து அவரின் பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடின. அதோடு எம்ஜிஆர் பாணியில் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று தொடர்ந்து உறுதியாக இருந்து வந்ததால் ஹீரோ மார்க்கெட் டல் அடித்த பிறகு தேடிச்சென்ற கேரக்டர் வேடங்களில் நடிக்க மறுத்தார் ராமராஜன்.
இந்த நிலையில் 2001ம் ஆண்டு ஆண்டுக்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தி இருந்த ராமராஜன், அரசியலில் சிலகாலம் பயணித்தார். 2012ம் ஆண்டில் மேதை என்ற படத்தில் நடித்தவர் தற்போது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சாமானியன் என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இயக்குநர் ராகேஷ்.. என்பவர் இயக்கும் இந்த படத்தில் ராதாரவி, எம். எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடிக்கின்றனர். அதுவும் இப்படம் 5 மொழிகளில் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்குது
தற்போது அப்படத்தின் டீசர் லாஞ்ச் இன்னிக்கு ஈவ்னிங் கிராண்டா நடக்க இருக்குது
From The Desk of கட்டிங் கண்ணையா!
Comments