நடிகை & பாடகி எஸ். வரலட்சுமி காலமான தினமின்று

 


நடிகை & பாடகி எஸ். வரலட்சுமி காலமான தினமின்று🥲
எஸ். வரலட்சுமி, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை மற்றும் பின்னணிப் பாடகியாவார். அவரது பாடல்கள் மற்றும் வேடங்களுக்காக தமிழில் வீரபாண்டிய கட்டபொம்மன், சவாலே சமாளி மற்றும் தெலுங்கில் மகாமந்திரி திம்மரசு, வேங்கடேசுவர மகாத்மியம் ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கன.
தெலுங்கு தாய்மொழி என்றாலும் அட்சர சுத்தமான இவரது தமிழ் உச்சரிப்பு அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் படங்களில், அவர் எழுதிய தஞ்சை வட்டார வழக்கில் அமைந்த நீள நீள வசனங்களையும் அற்புதமாகப் பேசி நடித்தவர். அதனாலேயே அவருடைய பல படங்களிலும் வரலட்சுமிக்குத் தவறாமல் முக்கிய வேடங்கள் அளிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, ‘அடி, மகமாயி’ என்ற வசனமும் அழுத்தம் திருத்தமாக அதனை வரலட்சுமி உச்சரிக்கும் பாங்கும் மிக இயல்பான ஒன்று.
அதே போல, ஒரு படத்தில் எம்.ஜி.ஆரின் அம்மாவாக நடிக்க வைக்கலாம் என இயக்குநர் விரும்பியதாகவும், ஆனால் வரலட்சுமியின் உடல் கட்டுக்குலையாமல் இருப்பதால் தனது அம்மாவாக அவர் நடித்தால் பொருத்தமாக இருக்காது என எம்.ஜி.ஆர் நிராகரித்ததாகவும் அக்கால சினிமா பத்திரிகைகள் கூறுகின்றன. பின்னர் அதே எம்.ஜி.ஆர் ‘நீதிக்குத் தலை வணங்கு’ படத்தில் எஸ். வரலட்சுமியை தனக்கு தாயாக நடிக்க வைத்தார்.
ஆனால், வரலட்சுமி இப்படத்தில் பாடிய ‘இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப்பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்’ பாடல் என்றைக்கும் கேட்கும் பாடலாய் நிலைத்து நிற்கிறது. ‘கந்தன் கருணை’, ‘ஆதி பராசக்தி’, ‘காரைக்கால் அம்மையார்’ ஆகிய படங்களில் தேவியராக நடித்தார். ‘ராஜ ராஜ சோழன்’ படத்தில் ராஜராஜனின் அக்காள் குந்தவை பாத்திரத்தில் நடித்தார். பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்த இப்படத்திலும் இவரின் குரலில் பாடல் இடம் பெற்றது. அவர் நடித்த கடைசிப் படம் ‘குணா’. மிக முதிர்ந்த தோற்றத்தில் நடித்த இதுவே அவரின் இறுதிப்படமும் ஆகும்
.From The Desk of கட்டிங் கண்ணையா!
🔥

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்